இனி வரும் காலம் இளைஞர்கள் காலம் தான். எனவேதான் இளைஞர்கள் தம் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றார்கள்.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமுதாயத்தில் இளைஞர்கள்
- இளைஞர்களின் சிறப்புகள்
- இளைஞர்களின் சாதனைகள்
- இளைஞர்களின் முன்னேற்றம்
- முடிவுரை
முன்னுரை
ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு முதுகெலும்பாக அமைந்து காணப்படுபவர்கள் அந்த நாட்டின் இளைஞர்கள் ஆவார்கள்.
புதிய சிந்தனைகள் மேம்பட்ட திறன்கள் புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளையும் தொழில்நுட்பத்தையும் கையாளுதல் போன்ற பல எண்ணற்ற பரிணாமங்களை கொண்டவர்களாக இளைஞர்களே காணப்படுகின்றார்கள்.
சமுதாயத்தில் இளைஞர்கள்
இன்றைய காலத்தில் இளைஞர்கள் தங்களது சக்தியை நல்வழிகளில் பயன்படுத்தி நாட்டினுடைய வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும். தாழ்வு மனப்பான்மை தகர்த்துச் சமூக அக்கறை கொண்டவர்களாய் இளைஞர்கள் மாற வேண்டும்.
தற்காலத்தில் இந்தியாவின் பாரிய பிரதேசங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே, மாணவர்கள் மாணவர் தேசியப்படை, நாட்டுநலப் பணித்திட்டம் போன்றவற்றில் இணைந்து கிராமங்களுக்கு சென்று நோய் எதிர்ப்பு சம்பந்தமான விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தல், நீர்நிலைகளை சுத்தம் செய்து தூர் வாருதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றமை மற்றும் போன்ற சமூக அக்கறை சார்ந்த விடயங்களில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாக காணப்படுகிறது.
இளைஞர்களின் சிறப்புகள்
இன்றைய இளைஞர்கள் திறமைகளும் அறிவிலும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே தான் விவேகானந்தர் அவர்கள் “நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். நான் இந்த நாட்டையே மாற்றி காட்டுகின்றேன்.” என்றார்.
அப்துல் கலாம் அவர்களும் “நம் நாட்டு இளைஞர்களின் கைகளில்தான் நம் நாட்டின் எதிர்காலம் என்பது அமைந்த காணப்படுகிறது” என்று கூறுகிறார்.
இளைஞர்களின் சாதனைகள்
இன்றைய காலத்தில் உலக அரங்குகளில் இந்திய இளைஞர் சமுதாயத்தின் ஆதிக்கம் பரவல் அடைந்த வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச வணிகம் என்பவற்றில் இளைஞர்கள் பாரிய தடம் பதிக்கின்றனர்.
உதாரணமாக, அமெரிக்க நாட்டில் அமைந்து காணப்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக இந்திய நாட்டின் மதுரையை சேர்ந்த இளைஞரான “சுந்தர் பிச்சை” அவர்கள் காணப்படுகின்றமை சிறப்பான விடயமாகும்.
இவ்வாறு பல இலட்சக்கணக்கான இந்திய நாட்டின் இளைஞர்கள் உலகங்கள் சென்று சாதனை புரிந்து வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும். வெளிநாடுகளில் காணப்படுகின்ற பல்கலைக்கழகங்களில் அதிகப்படியான இந்திய இளைஞர்களே தகவல் தொழில்நுட்பம் பயில்கின்றனர்.
கல்விகள் மட்டுமல்லாத விளையாட்டுத் துறையிலும் இந்திய இளைஞர்கள் பல சாதனைகளை புரிகின்றனர்.
இளைஞர்களின் முன்னேற்றம்
இளைஞர்கள் முன்னேற்றம் என்பது அடிப்படைகள் இரண்டு முக்கிய இலக்குகளை கொண்டது ஆகும். அவையாவன அக முன்னேற்றம், புற முன்னேற்றம் என்பவை ஆகும். அக முன்னேற்றம் என்பது இளைஞர்களின் தனித்திறமையை சார்ந்தது ஆகும்.
இது ஒரு செயலை மேற்கொள்வதற்கான தனி நபர் திறன்களை வளர்த்தல் மற்றும் முறையாக செயல்படுத்தல் என்பவையை குறிக்கும்.
புற முன்னேற்றம் என்பது பொது நிலைகள் சமூக மேம்பாடு கருதி ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுதல் சார்ந்தது ஆகும். இது குடும்பம், சமூகம், நாடு, மக்கள், வளர்ச்சி, மாற்றம் போன்றவற்றல் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றலை குறிக்கிறது.
மேலும் பிறரைப் புரிந்து கொள்ளுதல், சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணுதல், உறுதியான முடிவெடுத்தல், பாதிப்புகளை உள்வாங்குதல் போன்ற திறன்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
முடிவுரை
இன்றைய கால இளைஞர்கள் இந்தியாவை வல்லரசாக கட்டி எழுப்பும் திறமை படைத்தவர்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
இதனை நிறைவேற்றுவது என்பது அவர்களின் எண்ணங்கள், முயற்சிகள், பண்புகள், ஈடுபாடுகள், செயலாற்றும் முறைமைகள், மன உறுதி ஆகியவற்றை பொறுத்தது ஆகும்.
You May Also Like: