நவமி என்றால் என்ன

navami in tamil

இந்து மக்கள் அனைவரும் பொதுவாக எந்தவொரு காரியத்தையும் இடம், நேரம், திதி அறிந்து செய்கின்றனர். பஞ்சாங்கங்கள் குறிப்பிடும் நேரங்களிலே தமது விசேட கர்மங்களை ஆற்றுகின்றனர்.

அந்த வகையில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகளிலும் இந்து மக்கள் எந்த ஒரு சுபகாரியங்களையும் செய்வது இல்லை. இத்திதிகளில் எந்த சுபகாரிகளை செய்தாலும் அவை சரிவர நடக்காது எனும் கருத்து மக்களிடையே பரவலாக காணப்படும் ஐதீகம் ஆகும்.

நவமி என்றால் என்ன

பஞ்சாங்கம் என்றால் என்ன

பஞ்சாங்கம் என்பது திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் எனும் ஐந்து அங்கங்களை அடிப்படையாகக் கொண்டு காலம் நேரம் என்பவற்றை வரையறுத்துக் கூறும் இந்து நாட்காட்டி ஆகும்.

நவமி என்றால் என்ன

‘நவ’ என்னும் சொல்லானது வடமொழியில் இருந்து தோற்றம் பெற்ற சொல்லாகும். இது தமிழ் மொழியில் ஒன்பது எனும் பொருளை தரும் சொல்லாக அமைகிறது.

நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்துக்களின் காலக்கணிப்பு முறையில் மாதந்தோறும் சுழற்சி முறையில் வரும் அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஒன்பதாவது நாள் ஆகும்.

நவமியின் வகைகள்

நவமி வரும் தினங்களை அடிப்படையாகக் கொண்டு அவை  இரண்டு வகைப்படும். அவையாவன,

1. சுக்கில பட்ச நவமி

அமாவாசையை அடுத்து வரும் நவமியை சுக்கிலபட்ச நவமி என்று அழைக்கின்றனர்.

2. கிருஷ்ணபட்ச  நவமி

பூரணையை அடுத்து வரும் நவமியை கிருஷ்ணபட்ச  நவமி என்று அழைக்கின்றனர்.

இராமநவமி

அஷ்டமியும், நவமியும் துரதிஷ்டமான காலங்கள் என்பதனால் அனைவரும் இத்தினங்களில் எந்த சுப காரியங்களையும் செய்யாமல் ஒதுக்கி வந்தனர். அதனால் மனமடைந்த அஷ்டமம் நாமமையும் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.

அவற்றின் கவலையை போக்குவதற்காக அஷ்டமி திதியில் திருமால் விஷ்ணு அவதாரத்தையும், நவமி திதியில் தசரதர், கோசலை தம்பதியினருக்கு மகனாக இராமர் அவதாரத்தையும் எடுத்தார். இராமபிரான் பிறந்த தினம் இராமநவமி என அழைக்கப்படுகிறது.

மகாநவமி

புரட்டாதி மாதத்தின் வளர்பிறை பிரதமையில் தொடங்கும் நவராத்திரியின் ஒன்பதாவது நாள் மகாநவமி என அழைக்கப்படுகிறது.

நவமி அன்று செய்யக்கூடிய காரியங்கள்

  • ஒருவரது ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி தினத்தின் அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.
  • காவல் தெய்வ வழிபாடு செய்யலாம்.
  • எல்லைப்புறத்  தெய்வ வழிபாடு செய்யலாம்.
  • நவமையியல் எதிரிகள் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்தால், அவை நிச்சயமாக வெற்றி உண்டாக்கும்.
  • இத்தினங்களில் சரஸ்வதி அன்னையை வணங்கி எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அது வெற்றியை உண்டாக்கும்.

நவமி அன்று செய்ய கூடாதவை

  • நவமி தினங்களில் எந்த சுப காரியங்களும் செய்தல் கூடாது.

எடுத்துக்காட்டு: திருமணம் நிகழ்வு, பிறந்தநாள் விழா, பூப்புனித நீராட்டு விழா, ஏடுதொடக்கல் விழா.

You May Also Like:

கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது