இந்தியாவில் காணப்படுகின்ற அரசு பள்ளிகளை உயர்வு செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் சிறப்பான திட்டமாக “நம் பள்ளி நம் பெருமை” திட்டம் காணப்படுகிறது. இந்திய மக்களினால் அதிக வரவேற்பை பெறுகின்ற சிறந்த கல்வி திட்டமாக இது காணப்படுகின்றது.
நம் பள்ளி நம் பெருமை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நம் பள்ளி நம் பெருமை திட்டம்
- நோக்கம்
- நன்மைகள்
- இடைத் தொடர்பு
- முடிவுரை
முன்னுரை
இந்த உலகினிலே எந்தக் காலத்திலும் என்றும் அழியாத சிறந்த செல்வமாக காணப்படுவது கல்வி ஒன்று மாத்திரமே ஆகும். இது கள்வர்கள் கூட கவர்ந்திட இயலாத அரிய வகை விலை மதிப்பற்ற செல்வமாகும்.
இத்தனை பெருமை வாய்ந்த கல்வியினை ஒழுக்கத்தோடு மாணவர்களுக்கு கற்பிக்கும் இடமாக பள்ளிகள் காணப்படுகின்றன. இந்தப் பள்ளிகள் தன்னலமற்ற ஆலயங்களாகவும் காணப்படுகின்றது.
பள்ளிகளையும், கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சிறப்பான திட்டங்களுள் ஒன்றாக “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டமானது 20 அங்கத்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் இயங்கும் திட்டமாக காணப்படுகின்றது.
நம் பள்ளி நம் பெருமை திட்டம்
தமிழ்நாட்டில் காணப்படுகின்ற அரசு பாடசாலைகள் அனைத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் பள்ளி கல்வித் துறையினால் பள்ளிகளில் உள்ள மேலாண்மை குழுக்களை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு தோற்றம் பெற்றது “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டம் ஆகும்.
இந்தத் திட்டமானது ஆரம்பத்தில் 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆனால் சில இடர்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டமானது ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒரு குழுவாக இயங்குகிறது. இந்த குழுக்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
நோக்கம்
“நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தின் பிரதான நோக்கம் யாதெனில், அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்களை ஆரம்பித்து அக்குழுக்களின் ஊடாக பள்ளிகளை மேம்படுத்த வாயிலாக மாணவர்களின் கல்வியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிகளிலும் மேலாண்மை குழு அமைக்கப்படுகின்றது. இந்த மேலாண்மை குழுவின் தலைவராக பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் பெற்றோரே காணப்படுவர்.
நன்மைகள்
இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான இடைத்தொடர்புகள் வலுவாக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் பள்ளியின் மேம்பாடு, மாணவர்களின் மேம்பாடு, பெற்றோர்களின் பள்ளி மேம்பாடு கோரிக்கைகள், பெற்றோர்களின் கற்பித்தல் ஆலோசனைகள், மாணவர்களின் நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் தேவைகள் என்பன இக்குழுக்களின் ஊடாக கலந்துரையாடப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
இதன் மூலமாக மாணவர்களின் கல்வி சார்ந்த விழிப்புணர்வு மக்களாக காணப்படுகின்ற பெற்றோர்களிடையே ஏற்படுத்தப்படுகின்றது.
அத்துடன் மாணவர்களின் நிலையினை அறிந்து அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள கூடியவாறும் காணப்படுகிறது.
இடைத் தொடர்பு
“நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தின் மூலம் இயங்கும் மேலாண்மை குழுவின் ஊடாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்பவர்களுக்கு இடையிலான இடைத்தொடர்புகள் அதிகரிக்கப்படுகின்றது.
இக்குழுவில் தலைவராக பள்ளியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் பெற்றோர் காணப்படுவதனால் பெற்றோர்கள் சார்பான பிரச்சனைகளையும், ஆலோசனைகளையும் ஆசிரியர்கள் இலகுவாக புரிந்து கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றது.
அதாவது இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்களுடைய குறை நிறைகளை பெற்றோர்களும் அறிந்து கொள்ள கூடியதாக இருப்பதுடன் மாணவர் ஒருவருடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மனநிலை தொடர்பாக ஆசிரியரும் அறிந்து கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றது.
முடிவுரை
இந்த திட்டத்தின் மூலமாக பள்ளிகளில் கல்வி மேம்பாடுகளும் பள்ளி சமூகங்கள் சார்ந்த பல நலத்திட்டங்களும் சிறந்த முறையில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் திட்டத்தினை வெற்றி பெற செய்வது ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கையினிலேயே தங்கியுள்ளது. இந்தியாவில் இத்திட்டமானது அனைத்து மக்களாலும் வரவேற்கப்படுகின்றது.
You May Also Like: