நடையின் பங்கு பயனும் கட்டுரை

nadaiyin pangum payanum katturai in tamil

“வருமுன்னே காப்போம்” என்ற வாசகத்துக்கு அமைய எமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சிறந்த ஓர் நடைமுறை நடைபயிற்சி ஆகும். இன்று நாம் வாழும் உலகில் எத்தனையோ பேர் பலவிதமான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடைப்பயிற்சி செய்வது பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. தேவையில்லாத கொழுப்புகளை குறைப்பதற்கும் இந்த நடைபயிற்சி உதவுகின்றது.

நடையின் பங்கு பயனும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நடைப்பயிற்சியின் அவசியம்
  • நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முறை
  • நடைபயிற்சியினால் கிடைக்கும் பயன்கள்
  • தற்காலத்தில் நடைப்பயிற்சி
  • முடிவுரை

முன்னுரை

உலகில் ஒருவனுக்கு எல்லா செல்வங்களையும் விட சிறந்த செல்வம் உடல் நலமாகும். அதாவது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதன் மூலம் நாம் இதனை புரிந்து கொள்ள முடியும்.

உடல் வலுவின் மூலம் உழைக்கும் திறன் இன்றைய காலகட்டங்களில் அதிகமாக குறைந்து கொண்டே வருகின்றது. எனவே நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரே வழி அதிகமாக நடப்பதாகும்.

நடைப்பயிற்சியின் அவசியம்

நோயின்றி வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவுடன் நடைப் பயிற்சியும் அவசியமான ஒன்றாகும். அதாவது “உடற்பயிற்சியின் அரசன்” என இந்த நடைபயிற்சி அழைக்கப்படுகின்றது.

எமது உடம்பில் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால் அது நடைபயிற்சியினால் மட்டுமே முடியும். உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும் ஒரு செயற்பாடாகவே இந்த நடைபயிற்சி காணப்படுகின்றது.

எனவே நாம் இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதனால் எமக்கு ஆரோக்கியமான வாழ்வினையும், நோயற்ற வாழ்வினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முறை

இன்று நாம் வாழும் உலகில் பல்வேறு நபர்கள் தங்களுடைய ஆரோக்கிய வாழ்வுக்காக இந்த நடைபயிற்சிகளில் ஈடுபடுவதனை நாம் கண்முன்னே காண முடிகின்றது. அந்த வகையில் இந்த நடைபயிற்சியினை மேற்கொள்ளும் முறையாக ஒருவர் காலையில் அல்லது மாலையில் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

அதாவது காற்றோட்டமான, இயற்கையான ஒரு சூழலில் நடைபயிற்சி செய்வது சிறந்ததாகும். நடைபயிற்சி செய்யும் போது முன்னோக்கி பார்த்தபடி கைகளை முன்னும், பின்னும் ஒரே சீராக வீசியவாறு நடந்து செல்ல வேண்டும்.

நடைப்பயிற்சியினால் கிடைக்கும் பயன்கள்

இன்று மனிதன் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த உலகிலே வாழ்ந்து வருகின்றான். எனவே அவனுடைய மனதினை அமைதிப்படுத்துவதற்கும் சாந்தப்படுத்துவதற்கும் ஒரு வழியாகவே இந்த நடைபயிற்சி காணப்படுகின்றது.

அத்தோடு உடல் சுறுசுறுப்பாகும், நன்றாக தூக்கம் வரும், நரம்பு மண்டலம் சீராகும், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும், உடல் பருமன் குறையும், சுவாச நோய்கள் குறையும், மன அழுத்தம் மறையும், கண்பார்வை கூர்மையாக்கப்படுகிறது, இரத்த குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்பு திட்டுகளை நீக்கும்,

இவ்வாறாக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் தவறாமல் நடை பயிற்சி செய்ய வேண்டியது எமது கடமையாகும்.

தற்காலத்தில் நடைப்பயிற்சி

நாம் வாழும் இக்காலாட்டமானது நவீன கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதிகமாக காணநப்படுவதால் தற்காலத்தில் உணவு பதார்த்தங்களில் அதிகமான இரசாயன கலவைகள் காணப்படுவதோடு, தரம் குறைந்த போலியான உணவுப் பொருட்களும் அதிகமாக காணப்படுகின்றன.

இவ்வாறான உணவு பொருட்களை உட்கொள்வதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.

எனவே தேவையில்லாத பருமனையும் தேவையில்லாத உடல் நோய்களையும் கட்டுப்படுத்த நடைப்பயிற்சி அத்தியாவசியமானதாகவே காணப்படுகின்றது. இன்று பெரும்பாலானோர் அதிகாலையில் அல்லது மாலையில் இந்த நடை பயிற்சியில் ஈடுபடுவதனை காணலாம்.

முடிவுரை

மனிதர்களாகிய எமக்கு இறைவனின் அருட்கொடையாக கிடைத்ததே இந்த நடையாகும். அதாவது நாம் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்வதற்கு இந்த நடத்தல் என்பது எமக்கு உதவுவதாக காணப்படுகின்றது.

இயற்கையாகவே எமக்கு கிடைத்த இந்த நடை என்பது எமது ஆரோக்கியத்தை பேணுவதற்கான ஓர் சிறந்த முறையாகும்.

எனவே நாம் அனைவரும் அதிகாலையில் அல்லது சூரியன் மறையும் வேலையில் இந்த நடை பயிற்சியில் ஈடுபட்டு எமது ஆரோக்கியத்தினை பேணி பாதுகாக்க வேண்டும்.

You May Also Like:

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை