இந்தியாவில் காணப்படும் அழகிய நதிகள் கூட தற்காலத்தில் மாசடைந்து காணப்படுகின்றன.
தூய்மை இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தூய்மை இல்லாமை
- தூய்மை இல்லாமைக்கான காரணங்கள்
- தூய்மை இன்மையால் ஏற்படும் பாதிப்புகள்
- நாம் செய்ய வேண்டிய கடமைகள்
- முடிவுரை
முன்னுரை
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டின் தூய்மையில் அடங்கி உள்ளது. ஒரு நாட்டின் தூய்மையே அந்நாட்டினை அபிவிருத்தியை நோக்கிச் கொண்டு செல்லும்.
தற்காலத்தில் மாசடைதல் என்பது பல நாடுகளின் பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. பல்வேறுபட்ட மதங்கள் பல்வேறுபட்ட இனங்களைக் கொண்ட இந்தியாவானது அபிவிருத்தி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அப்பாதையில் பெரும் பிரச்சனையாக மாசடைதல் என்பது காணப்படுகின்றது.
தூய்மை இல்லாமை
துய்மையின்மை என்பது சமூகத்திலேயே காணப்படும் ஒரு பாரிய பிரச்சினையாகும். அவ்வகையில் அக்காலம் தொட்டு இக்காலம் வரை தூய்மை இன்மை என்பது இந்தியாவில் காணப்படும் பெரும் பிரச்சனையாகும்.
தற்போது இந்தியாவானது மாசடைந்து வரும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் காணப்படுவதோடு கிட்டத்தட்ட 58% நிலம் மாசடைந்து மாசடைந்த நிலையில் காணப்படுகின்றது. அவ்வகையில் இந்தியாவில் பெரும் பகுதி மாசடைந்த நிலையில் காணப்படுகின்றது எனலாம்.
டெல்லி அதிக வளி மாசடைந்த நகரமாக காணப்படுகின்றது. அளவுக்கதிகமான கழிவுகள் வாகனப் புகைகள் போன்றன நகரை மாசடைய செய்வதால் இந்திய மக்கள் சுவாசிக்க கூட சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் காணப்படும் அழகிய நதிகள் கூட தற்காலத்தில் மாசடைந்து காணப்படுகின்றன. அவற்றில் மிக மோசமாக மாசடைந்துள்ள நதியே யமுனை நதியாகும்.
இவ்வாறான மாசடைந்த நதிகளில் குப்பை கழிவுகள், அசேதனக் கழிவுகள், பார உலோகங்கள், ரசாயன கழிவுகள் போன்றன அதிகமாக உள்ளன.
இவ்வாறு மட்டுமின்றி சட்ட விரோதமாக குப்பை போடும் செயற்பாடும் இந்த இந்தியாவிலேயே அதிகமாக காணப்படுகின்றது. திட்டமிடப்படாத நகர உருவாக்கம் அதாவது சேரிகள் உருவாக்கம் இன்மையும் இதற்கான காரணங்களாகும்.
அதுமட்டுமின்றி இந்தியா மாசடைவதற்கு காரணமாக அங்கு பயன்படுத்தப்படும் மக்கி போகாத பிளாஸ்டிக் பொருட்களும் முதன்மை பொருட்கள் முதன்மை காரணம் எனலாம்.
தூய்மை இல்லாமைக்கான காரணங்கள்
இந்தியாவில் காணப்படும் சனத்தொகை பெருக்கமே தூய்மை இன்மைக்கான முக்கிய காரணமாகும் மற்றும் நகர்ப்புறங்களை அண்டிய பிரதேசங்களில் பாரிய சேரி உருவாக்கம் அதாவது திட்டமிடப்படாத குடியிருப்புக்களின் உருவாக்கமானது இந்தியாவை அதிக மாசடைய செய்யும் ஒரு காரணியாக காணப்படுகின்றது.
அத்தோடு இந்தியாவில் உட்காத பொருட்களின் பாவனை அதிகமாக காணப்படுவதனாலும் வாகன ஓட்டம் அதிகமாக காணப்படுவதினாலும், திட்டமிடப்படாத கழிவுகளை அகற்றும் முறை காணப்படுவதனாலும் இந்தியா மாசடைகின்றது.
இவ்வாறான பல காரணிகளினால் இந்தியா நாளுக்கு நாள் அதிகமாக மாசடைந்து போகின்றது. இந்தியா மாசடைந்து கொண்டே செல்லுமாயின் இந்தியாவானது வல்லரசான நாடாக மாறுவது கடினமான நிலையாக மாறிவிடும்.
தூய்மை இன்மையால் ஏற்படும் பாதிப்புக்கள்
இந்தியாவில் தூய்மை இன்மையானது பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. வாகன நெரிசல் காரணமாக வெளியேறும் புகையால் மக்கள் சுவாசப் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
சில பிரதேசங்களில் நதிகள் மாசடைவதன் காரணமாக மக்கள் குடிநீர் இன்றி பாதிக்கப்படுகின்றனர். மேலும் பலர் தோல் நோய்களுக்கும் உள்ளாகின்றனர்.
மேலும் பல தொற்று நோய்கள் தூய்மையின்மை காரணமாக பரவுகின்றன. இவற்றையெல்லாம் நிறைவு செய்ய மக்களாகிய நாமே முயற்சி எடுக்க வேண்டும்.
நாம் செய்ய வேண்டிய கடமைகள்
சுத்தம் சுகம் தரும் என்ற வாக்கினை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு செயல்பட்டால் தூய்மை இந்தியாவை வெகு விரைவில் நாம் காண முடியும்.
“சமுதாயத்தை மாற்ற நினைக்கும் நீ முதலில் மாற வேண்டும் மாற்றம் என்பது உன்னிலிருந்து துவங்கட்டும்” என்ற மகாத்மா காந்தியின் வாக்குகிணங்க நாம் அனைவரையும் தூய்மையாக இருங்கள் என்று கூறுவதை விட நாம் ஒவ்வொருவரும் தூய்மையாக செயல்பட்டால் நாடு இலகுவில் தூய்மையாகும்.
அதாவது பொழுத்தீன், பிளாஸ்டிக் போன்றவற்றை நிறுத்தி உக்கக்கூடிய பொருட்களை பாவனை செய்வதன் மூலமும், தொழிற்சாலை கழிவுகளை நதிகளில் அகற்றாமல் உரிய முறையில் அகற்றுவதன் மூலமும், வாகனப் பாவனையை குறைப்பதன் மூலமும், நதிகளை தூய்மைப்படுத்தி சரியான முறையில் பேணுவதன் மூலமும்,
குப்பை கூழங்களை சரியான முறையில் அகற்றுவதன் மூலமும், ரசாயனமற்ற உணவு பழக்க வழக்கங்களை உருவாக்குவதன் மூலமும், இயற்கை முறையில் விவசாயத்தை மேற்கொள்வதன் மூலமும் இந்திய நாட்டை தூய்மைப்படுத்தலாம்.
முடிவுரை
இவ்வகையில் எல்லா துறையிலும் சிறப்புப்பெற்று தனக்கென ஒரு இடத்தினை தடம் பதிக்கும் இந்தியாவானது தன் தேசத்தினை மறந்து தேச தூய்மையை மறந்து செயல்படுகின்றது.
தவறான ஆட்சியாளர்களின் கையில் ஆட்சி கிடைப்பதன் மூலமும் அந்நாட்டில் உள்ள மக்களின் செயற்பாட்டின் மூலமும் நாடானது மனிதன் வாழக்கூடிய நிலை இன்றி காணப்படுகின்றது.
அளவு கடந்த இயற்கை எழில் கொண்ட பாரத தேசத்தின் மீது நேசம் கொண்டு நாம் தேசப்பற்றுடன் தூய்மையைப் பேணி தூய்மை இந்தியாவை ஒன்று சேர்ந்து உருவாக்குவோம்.
You May Also Like: