தமிழ் நாடகத்தின் தந்தை யார்

பம்மல் சம்பந்த முதலியார்

தமிழ் நாடகத்தின் தந்தை யார்?பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார்

1873ம் ஆண்டு பெப்ரவரி-1 சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியார் என்பவருக்கும் மாணிக்கவேலு அம்மாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்.

இவருடைய தந்தையார் ஒரு தமிழ் ஆசிரியர் ஆவார். அதுமட்டுமல்லாமல் கல்வித்துறையில் ஆய்வாளராகவும் இருந்தார். இதனால் பின்னாளில் பல ஆங்கில,  தமிழ் நூல்களை தானே எழுதி வெளியிட்டார்.

தந்தையார் சிறந்த எழுத்தாளர் என்பதால் வீட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் காணப்பட்டன. இதனால் பம்மல் சம்பந்தம் வீட்டிலிருக்கும் போதே எல்லா புத்தகங்களையும் ஒவ்வொன்றாக ஆர்வத்துடன் படித்தார்.

சம்பந்தர் தனது பாடசாலைக் கல்வியை கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பர் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி, ஆகிய பள்ளிகளிலும் சட்டக் கல்லூரியில் கல்வியை முடித்து வழக்கறிஞர் ஆனார். 1924 முதல் 4 வருடங்கள் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் தலைவராக பணி புரிந்தார்.

நாடகத்துறை மீதான ஆர்வம்

சம்பந்தர் சிறு வயதில் இருந்தே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்து பார்த்து வளர்ந்தார். தமிழ் மொழியிலான நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதன் மீது வெறுப்பைக் கொண்டிருந்தார்.

இவர் 1891ல் கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகரின் தீவிர ரசிகர் ஆவார். அந்த நடிகரது நாடகக் குழுவில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் எனப் படித்த பலரும் இருப்பதைப் பார்த்த இவர் நலிவுற்று இருந்த தமிழ் நாடகத் துறையை சீர்ப்படுத்த தாமும் அது போல ஒரு நாடகக் குழுவை அமைக்கத் திட்டமிட்டார்.

இதனால் 1891ல் சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுனில் “சுகுண விலாச சபை” என்ற நாடக குழுவை உருவாக்கினார்.

தமிழ் நாடகத் துறைக்கான இவரது செயற்பாடுகள்

மக்களிடையே நாடகம் என்ற எண்ணக்கருவில் நிலைத்திருந்த தெருக்கூத்து சிற்றூர்களினைச் சேர்ந்த பாமர மக்களே நடிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்ற கொள்கையை மாற்றி நகரங்களிலேயும் நல்ல மேடைகள் அமைத்து கற்றவர்கள், அறிஞர்கள் போன்றவர்களை தன்னுடைய நாடகங்களில் இணைத்து நடிக்கச் செய்து மக்களிடையே பரப்பியிருந்த நாடகம் பற்றிய தாழ்ந்த எண்ணக் கருத்துக்களை மாற்றி அமைத்தார்.

மொத்தமாக 80 நாடகங்களை எழுதினார். தன்னுடைய நாடகங்களினை செய்யுள், கீர்த்தனை வடிவிலும் இயற்றினார். மக்களிடையே தமிழ் நாடகங்கள் பற்றிய எண்ணத்தை உயர்ந்த இடத்தில் மாற்றி தமிழ் நாடகத்தின் தந்தை என்ற பெயரை பெற்றுக் கொண்டார்.

சங்கீத நாடக அகாதமி விருது, பத்ம பூஷண் விருது, நாடகப் பேராசிரியர் போன்ற பல விருதுகளைப் பெற்றார்.

ஆங்கில எழுத்தாளரான ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தமிழில் மொழி பெயர்த்தார். மகபதி, நீ விரும்பியபடியே, அமலாதித்யன், சிம்மளநாதன் போன்றன அவற்றுள் சிலவாகும். ரத்னாவளி, யயாதி, கலவாரிஷி, மனோகரா போன்ற நாடகங்கள் திரைப்படங்கள் ஆக்கப்படுள்ளன.

ஆங்கில மொழியிலான பல நூல்களும் தமிழ் மொழியிலான நாடகத்தமிழ், யயாதி, கள்வர் தலைவன், காதலர் கண்கள், நான் குற்றவாளி, என் சுயசரிதை, இந்தியனும் ஹிட்லரும், என் தந்தை தாயார் போன்ற பல தரப்பட்ட நூல்கள் தமிழ் நாட்டின் நாட்டுடைமையாக்கப்பட்டன. 1964 இல் செப்டம்பர் 24 அன்று இறைவனடி சேர்ந்தார்.

You May Also Like:

தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் யார்

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்