தமிழ்நாட்டு மாபசான் என்று போற்றப்படுபவர்

ஜெயகாந்தன்

தமிழ்நாட்டு மாபசான் என்று போற்றப்படுபவர்ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் இயற்பெயர்முருகேசன்

ஜெயகாந்தன் இளமைப்பருவம்

இந்தியாவின் கடலூர் மாவட்டத்தில் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் தண்டபாணிப்பிள்ளை மற்றும் மகாலெட்சுமி அம்மாள் என்பவருக்கு மகனாக அவதரித்தார்.

இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் முருகேசன் என்பதாகும். கல்விப் படிப்பில் வெறுப்பைக் காட்டிய இவர் ஐந்தாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தி அனுபவ அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் என்ற இடத்திற்கு சென்றார்.

அவருடைய மாமாவுடன் சில காலத்தை விழுப்புரத்தில் கழித்தார்.அங்கு வாழ்ந்த காலத்தில் பொதுவுடமைக் கோட்பாடுகள் மற்றும் பாரதியின் எழுத்துக்கள் போன்றவற்றைக் கற்றார்.

தொழிற்போக்கும் அரசியலும்

பின்னர் சென்னைக்கு குடி பெயர்ந்தார். அங்கு சில காலம் சி.பி.ஐ யின் அலுவலகத்தில் பணி புரிந்தார். அச்சக வேலை, ஜனசக்தி இதழ்கள் விற்றல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

1949களில் சி.பி.ஐ மற்றும் அதன் உறுப்பினர்கள் தடை செய்யப்பட்டனர். இதனால் சில மாதங்கள் காலணி விற்கும் கடை ஒன்றில் பணி புரிந்தார். அங்கு வேலை செய்த காலத்திலேயே அவருக்குள் இருந்த படைப்புத்திறன் மற்றும் எழுத்தாற்றல் திறன்கள் வெளியே வரத் தொடங்கின.

சுயமான சிந்தனை ஆற்றலை எழுத்து வடிவமாக மாற்றத் தொடங்கினார். நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக சி.பி.ஐ யின் ஆதிக்கம் படிப்படியாக மறையத் தொடங்கின.

அரசியல் கட்சிகளின் தகாத செயற்பாடுகள் காரணமாக முரண்பாடுகள் ஏற்பட்டு சி.பி.ஐ யை விட்டு வெளியேறினார். காமராசனின் அன்புக்குரியவராக மாறிய இவர் அவருடைய தீவிரமான தொண்டனாக மாறி பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்து சில காலம் பணி ஆற்றினார்.

இலக்கியப்பணி

முருகேசன் எனும் தன்னுடைய இயற்பெயரை இலக்கியப் பணியின் போது ஜெயகாந்தன் எனும் புனை பெயராக மாற்றிக் கொண்டார்.1950ல் தன்னுடைய இலக்கியப் பணியை ஆரம்பித்தார்.

இவருடைய படைப்புக்கள் தாமரை, சரஸ்வதி, ஆனந்த விகடன், கிராம ஊழியன் போன்ற இதழ்களில் வெளிவரத் தொடங்கின. இவருடைய படைப்புக்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக வலம் வந்தார்.

அதுமட்டுமல்லாமல் “உன்னைப் போல் ஒருவன்” , “சில நேரங்களில் சில மனிதர்கள் ”  போன்ற நாவல்கள் திரைப்படங்களாகத் தொகுக்கப்பட்டன. ஆதலால் இலக்கியத்துறை மட்டுமல்லாது திரையுலகிலும் மிகச் சிறந்த எழுத்தாளராக உருவெடுத்தார்.

இவருடைய நாவலான “உன்னைப் போல் ஒருவன் ” திரைப்படம் மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் இளமைக் காலத்தில் வறுமை ஏற்பட்ட போது ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாக புறப்பட்டு பின்னர் தனக்கு தெரிந்த பல வேலைகளிலும் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார்.

மளிகைக் கடை பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றல், டிரெடில் மென், அச்சுக் கோப்பாளர், இன்ஜின் கரி அள்ளுதல், பேக்டரியில் கை வண்டியில் இழுத்தல், ஜட்கா உதவியாளர், பத்திரிகை புரூப் ரீடர், உதவி ஆசிரியர் பின்னர் இறுதிவரை எழுத்தாளர் பணி என பல பரிணாம வழிகளில் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை நடத்தி வந்தார்.

படைப்புக்கள்

இவரது படைப்புக்களில் தன் வரலாற்றினை அரசியல், கலையுலகம், பத்திரிகை, ஆன்மீகம் என நான்கு பிரிவுகளாக அனுபவ ஏடுகளையும் காந்தி, முன்ஷி பிரேம் சந்திரன் போன்றவர்களது வாழ்க்கை வரலாற்றினையும்

பாரீசுக்குப் போ, பிரியாலயம், பிரம்ம உபதேசம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு குடும்பத்தில் நடக்கிறது போன்ற 40ற்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் குறு நாவல்களையும்

ஒரு பிடி சோறு, தேவன் வருவாரா, சுமைதாங்கி, பொம்மை போன்ற 14 சிறுகதைத் தொகுப்பினையும் நானும் எனது நண்பர்களும் என்ற கட்டுரைத் தொகுதியையும் ஆணும் பெண்ணும், பேசும் புழுக்கள், உதயம், பிழைப்பு போன்ற 145 சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ளார்.

இவர் சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது, ரஸ்ய விருது போன்ற விருதுகளை தன்னுடைய இலக்கியப் படைப்புக்காக பெற்றுள்ளார்.

இவர் சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றார். 2015இல் உடல் நலக் குறைவு காரணமாக உயிர் நீத்தார்.

You May Also Like:

வாசிப்பு பற்றிய கட்டுரை

உ.வே.சாமிநாதய்யர் பற்றிய கட்டுரை