இந்திய நாட்டில் பல தலைவர்கள் தோன்றி அவர்களுடைய சொற்பொழிவுகளாலும், செயல்களாலும் பாரிய புரட்சியை உருவாக்கியுள்ளனர். அத்தகைய குணாதிசயங்கள் கொண்ட தலைவர்களுள் சுவாமி விவேகானந்தரும் ஒருவராக காணப்படுகின்றார்.
சுவாமி விவேகானந்தர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப வாழ்க்கை
- இளமைப் பருவம்
- பொன்மொழிகள்
- முடிவுரை
முன்னுரை
‘தேசபக்த துறவி’ என்றும் ‘தேசீயத் துறவி’ என்றும் சிறப்பாக அழைக்கப்படுகின்ற சுவாமி விவேகானந்தர் அவர்கள் தலைசிறந்த சமய தலைவர்களுள் ஒருவராகவும், சிறந்த ஆன்மீகவாதியாகவும் காணப்படுகின்றார்.
இவர் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் உதவி அற்றோரின் நலனுக்காகவும் சிறந்த முறைகளில் பல சேவைகளை செய்த மகான் ஆவார். தன்னுடைய பொன்மொழிகளின் மூலம் மக்களிடையே பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
சுவாமி விவேகானந்தர் அவர்கள் விஷ்வாதநாத தத்தா மற்றும் புவனேஸ்வரி தேவி அம்மையாருக்கு மகனாக 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் நரேந்திரநாத் தத்தா என பெயரிட்டனர்.
சிறுவயதிலேயே கல்வியின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அத்துடன் சிறந்த நினைவாற்றலையும் உடையவராகவும் காணப்பட்டார். சிறந்த விளையாட்டு வீரராகவும், இசையும், இசை வாத்தியங்களையும் சிறந்த முறையில் பயின்றவராகவும் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநில கல்லூரியில் சேர்ந்தார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் படித்து முடித்தார்.
பின்னர் மேல்நாட்டு தத்துவங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு போன்றவற்றை முழுமையாக படித்த தெரிந்து கொண்டார்.
இவ்வாறு அவற்றை கற்கும் பொழுது அவர் மனதில் இறை உண்மைகளை பற்றிய பல கேள்விகளும், சந்தேகங்களும் எழ ஆரம்பித்தன.
இறைவனை பலர் வழிபடுவதும் உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது.
இது பற்றிய தெளிவாக அறிந்து கொள்வதற்காக இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக இணைந்து கொண்டார். பின்னர் பிரம்மா சமாஜத்தின் உறுப்பினராகவும் இணைந்தார்.
பொன்மொழிகள்
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் இளைஞர்கள் மத்தியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அவற்றின் சில பொன்மொழிகளை நோக்குவோம்.
“உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை துறக்க கூடாது”
“உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து அதிலிருந்து நல் செயல்கள் விளையும்
“சுயநலமின்மை சுயநலம் என்பவற்றைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை”
“நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கின்றது. வீரர்களாக திகழுங்கள், இளைஞர்களே தேச முன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரத்தை கிளப்புவதற்கு உங்கள் தோள்களை கொடுங்கள்.”
போன்ற பொன்மொழிகள் பிரசித்தமானவையாக காணப்படுகின்றன.
முடிவுரை
தன்னுடைய பொன்மொழிகளின் மூலம் சுதந்திர போராட்டத்திற்கு வலைவூட்டிய சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி, அவர் தனது 39 ஆவது வயதில் காலமானார்.
அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்றும் உலகம் முழுவதும் பல கிளைகளை பரப்பி சுவாமி விவேகானந்தரதும், அவரது குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரது கொள்கைகளை சிறப்புற செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You May Also Like: