சிங்கம் பற்றி சில வரிகள்

few lines about lion in tamil

காட்டிற்கே ராஜாவாக வர்ணிக்கப்படும் சிங்கம் பல நாடுகளின் தேசிய விலங்காக காணப்படுகின்றது. பொதுவாக சிங்கங்கள் அதிகமான நேரத்தை தூங்குவதற்காவே செலவிடுகின்றது.

சிங்கம் பற்றி சில வரிகள்

சிங்கம் என்பது பாலூட்டி வகையை சார்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும்.

சிங்கம் ஊன் உண்ணி விலங்கு வகையை சார்ந்தது.

பொதுவாக மான், காட்டெருமை, பன்றி, வரிக்குதிரை போன்ற விலங்குகளை விரும்பி வேட்டையாடி உண்ணும்.

நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை.

தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்ற பெயருண்டு.

சிங்கமானது பூனையின் பேரினத்தை சார்ந்தது.

சிங்கத்தின் ஆயுட்காலம் பொதுவாக பத்திலிருந்து பதினான்கு ஆண்டுகள் வரை இருக்கும்.

காட்டின் ராஜாவாக சிங்கமே கூறப்படுகின்றது.

சிங்கத்தின் கர்ஜனை கம்பீரமாக இருக்கும். இதன் கர்ஜனை பிற விலங்குகளுக்கு அச்சத்தை கொடுக்கும்.

சிங்கங்கள் இன்று இந்தியாவிலும் ஆபிரிக்காவில் உள்ள காடுகளிலுமே அதிகம் வாழ்கின்றது.

ஆகஸ்ட் 10-ம் திகதி உலக சிங்க தினமாக கொண்டாடப்படுகின்றது.

உலகில் 15 நாடுகள் சிங்கத்தை தேசிய விலங்காக பெருமை கொண்டாடுகின்றது.

You May Also Like:

யானை பற்றி சில வரிகள்

புலி பற்றி சில வரிகள்