ஒவ்வொரு மனிதனும் தனக்கான ஓர் தனித்துவத்தினை பெற்றுக்கொள்ளவே முனைகின்றனர். தனித்துவத்தினை வெவ்வேறு முறைகளின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் கல்வியினால் பெற்றுக் கொள்ளும் தனித்துவமானது ஏனைய அனைத்தையும் விட சிறப்பு மிகுந்ததாகும். இந்த வகையில் நாம் ஒரு உயர்ந்த இடத்தினை பெற்றுக் கொள்வதற்கு கற்றல் என்பது அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
சிகரம் தொட சிலேட்டை எடு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கல்வியின் அவசியம்
- கற்பதன் பயன்பாடுகள்
- கல்வியால் சிகரம் தொட்டவர்கள்
- கற்றோரின் பெருமைகள்
- முடிவுரை
முன்னுரை
ஒரு மனிதனை முழுமை அடையச் செய்வதும், அவனை அவனது வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையச் செய்வதற்காகவும் ஒருவன் கல்வி கற்பது அவசியமானதாகவே காணப்படுகின்றது.
அதாவது கல்வி அறிவில் சிறந்தவர்கள் சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுவதனை நாம் காண முடிகின்றது. எனவே சிகரத்தை தொட வேண்டும் என்றால் சிலேட்டை எடுக்க வேண்டும்.
கல்வியின் அவசியம்
நாம் வாழும் தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் கல்வி முக்கியமான ஓர் இடத்தையே பிடித்துள்ளது. அதாவது நாட்டின் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்கும் கல்வி இன்றி அமையாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
ஒருவன் திறமையையும், ஆளுமையையும், அறிவையும் பெற்றுக் கொள்வதற்கு கல்வி அவசியமானதாக காணப்படுகின்றது. கல்வி மூலமே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தினியும், புதிய பல வேலை வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
ஒருவன் நல்ல நிலையை அடையவும், வறுமையிலிருந்து விடுபடவும், அறியாமை எனும் இருளில் இருந்து நீங்கவும், பட்டம், பதவி, புகழ் ஆகிய அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கும் இந்த கல்வியே உறுதுணையாக நிற்கிறது.
கற்பதன் பயன்பாடுகள்
ஒருவன் தான் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என வேறு வழிகளில் முயற்சிப்பதனை விடவும் கற்பதன் மூலம் ஓர் உயர்ந்த நிலையை அடைவான் ஆனால் அது நிலையான ஒன்றாகவே காணப்படும்.காலத்தினால் அழியாத பெருமை மிக்கதாகவும் போற்றப்படும்.
வாழ்வில் அறியாமை எனும் இருளை நீக்கி வெளிச்சத்தின் பாதையில் பயணிப்பதற்கும் கற்றல் என்பது வழிகாட்டுவதாகவே அமையும். சிறந்த எண்ணங்களையும், செயல்களையும் தோற்று தோற்றுவிப்பதற்கு கல்வி பயன்படும்.
கல்வியினால் சிகரம் தொட்டவர்கள்
நாம் வாழும் சூழலில் சிறந்த தலைவர்கள் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் போன்ற பல்வேறு நபர்கள் இந்த கல்வியின் மூலம் சிகரம் தொட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புத் துறையில் தலைமை பொறுப்பை வகிக்கும் சுந்தர் பிச்சை, விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி ஆகிய கல்பனா சாவ்லா, ஏவுகணை நாயகன் என வர்ணிக்கப்படும் டாக்டர் அப்துல் கலாம்
மற்றும் மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற முதல் ஆசிய மற்றும் இந்திய பெண்ணான ஆனந்தி பாய் ஜோஷி போன்றவர்களை கல்வியின் மூலம் சிகரம் தொட்டவர்களே ஆவார்கள்.
கற்றோரின் பெருமைகள்
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்…..” என்று வரிகளின் ஊடாக கற்றோரின் பெருமைகளை ஔவையார் எடுத்துக்காட்டுவதனை காணலாம்.
அதாவது ஓர் அரசனுக்கு தன்னுடைய நாட்டில் மட்டும்தான் சிறப்பு கிடைக்கும் ஆனால் கற்றவனுக்கு அவன் செல்லும் இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் செல்வந்தன் ஒருவன் கால சூழ்நிலையால் ஏழையாக மாறிவிடலாம் ஆனால் கல்வி அறிவுடையவன் அவ்வாறு அல்லாமல் உயர்ந்தவனாகவே எப்பொழுதும் காணப்படுவான். அத்தோடு சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுபவனாகவும் காணப்படுவான்.
முடிவுரை
“உலகையே மாற்றக்கூடிய ஒரு பலமான ஆயுதம் உண்டு அதுதான் கல்வி” எனும் நெல்சன் மண்டேலாவின் கருத்துக்கு அமைவாக ஒவ்வொரு மனிதனும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
அழியாச் செல்வமாகிய கல்வியால் சிகரம் தொட்டவர்களை உதாரணமாகக் கொண்டு, நாமும் எம்முடைய வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதாவது சிகரம் தொட வேண்டுமானால் சிலேட்டை கையில் எடுக்க வேண்டும் என்பதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
You May Also Like: