“மனிதனை மனிதனாக கருத முடியாமல் அவரது சாதியை மட்டுமே வைத்து எடை போட முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது” என்றார் பெரியார்.
ஏற்றத்தாழ்வு உள்ள சமூகத்தில் சமூக நீதி என்பது அவசியமானதாக உள்ளது. ஒருவர் உயர்வானவர் எனவும், ஒருவர் தாழ்வானவர் எனவும் சமூகத்தில் பிரித்து நோக்கும்போது இருவரும் சமம் என பார்க்கப்பட வேண்டியதன் தேவை சமூகத்தில் ஏற்படுகின்றது.
மேலும் சமூக நீதியானது பல தசாப்தங்களாக விரிவடைந்துள்ளது. தற்காலங்களில் பாலினம், இனம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விவாதங்களில் சமூக நீதி பற்றி அதிகம் பேசப்படுகின்றது.
சமூக நீதிப் பிரச்சனைகள் பலவற்றிலும் பரவிக் கிடக்கின்றன. இனம், பாலினம், வயது, மதம், பாலியல் நோக்கு நிலை, கல்வி, தேசியம் மற்றும், மன அல்லது, உடல் திறன் போன்றவற்றிலும் சமூக நீதிப் பிரச்சனைகள் உருவாகியுள்ளதனை காண முடிகின்றது. இவற்றைக் களைவது காலத்தின் தேவையாக உள்ளது.
சமூக நீதி என்றால் என்ன
சமூக நீதி என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும், சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான, நியாயமான உறவைக் குறிக்கின்றது. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தலே சமூக நீதியாகும்.
அதாவது ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூகத்தில் மக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதாகும்.
சமூக நீதியானது சாதி அடிப்படையிலானதல்ல. சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அவர்களுக்கும் உதவுவதாக உள்ளது.
சமூக நீதியின் முக்கியத்துவம்
சமீபத்திய ஆண்டுகளில், “சமூக நீதி” என்ற சொல் “மனித உரிமைகள்” போலவே முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமூக வளர்ச்சிக்கு சமூக நீதி இன்றியமையாத ஒன்றாக திகழ்கின்றமையால் பெப்ரவரி 20 ஆம் திகதி அகில உலக சமூக நீதி தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
சமூக நீதியானது சமூகத்தின் பல அம்சங்களில் நியாயத்தையும், சமத்துவத்தையும் ஊக்குவிக்கிறது. எடுத்துக்காட்டாக, இது சமமான பொருளாதார, கல்வி மற்றும் பணியிட வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது. தனிநபர்கள் மற்றும், சமூகங்களின் பாதுகாப்பிற்கும் இது முக்கியமானது.
பாலியல் அடிப்படையில் பாகுபாடுகளில் இருந்து மக்களை பாதுகாக்கின்றது. உலகின் பல பகுதிகளிலும் பலரும் அன்றாட வாழ்வில் பாகுபாட்டிற்கு அடிக்கடி இலக்காகின்றனர். இதனைக் களைவதில் சமூக நீதி கவனம் செலுத்துகின்றது.
இன்று பெரும்பாலான சமூகங்களில் இனம் சார்ந்த பாகுபாடு பெரும் பிரச்சனையாக உள்ளது. இப்பிரச்சையானது மக்களுக்கு வேலை தேடுவது, நிம்மதியாக வாழ்வது போன்றவற்றைப் பாதிக்கின்றது. எனவே இங்கு சமூக நீதியானது பேணப்படும் போது ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்தவர்களும் நன்றாக வாழ முடியும்.
சமூக நீதி இல்லாததால் சமூக ஒடுக்குமுறை ஏற்படுகிறது. இது இனவெறி, பாலியல், வயது, வகுப்புவாதம், திறன் மற்றும் பன்முகத்தன்மை வடிவத்தில் இருக்கலாம்.
சமூக சேவையாளர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு உதவுகின்றனர். இதனால் சமூகப் பணி சமூக நீதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது எனலாம்.
மேலும் சமூக நீதியின் மூலம் ஒரு சமூகத்திலுள்ள அரசு அல்லது, அரச சாரா நிறுவனங்களின் உரிமைகளும், கடமைகளும் உறுதி செய்யப்படுகின்றன.
You May Also Like: