குப்பைகளை முறையாக அகற்றுவோம் கட்டுரை

குப்பைகளை முறையாக அகற்றுவோம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உலகளாவிய மாசடைதல்
  • குப்பைகள்
  • குப்பை அகற்றல் முகாமைத்துவம்
  • ஒவ்வொருவரதும் கடமை
  • முடிவுரை

முன்னுரை

உலகளாவிய ரீதியில் மனித வாழ்க்கையானது தினம் தினம் சவால் நிறைந்த ஒன்றாக மாறி வருகின்றது. இதற்கு பிரதானமான காரணமாக மனிதன் இயற்கையினை மாசடைய செய்வதனை குறிப்பிட முடியும்.

இயற்கை மாசடைதலில் மனிதனால் வெளியிடப்படும் குப்பைகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. இந்த குப்பைகளால் பூமி உயிரினங்கள் வாழ முடியாத ஒரு இடமாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுரையில் நாம் குப்பைகளை முறையாக அகற்றுதல் பற்றி காண்போம்.

உலகளாவிய மாசடைதல்

1950 தொடக்கம் 1970 வரையான காலப்பகுதியில் மனிதனால் வெளியிடப்பட்ட பொலித்தீன் உள்ளடங்கலான கழிவுகள் முகாமை செய்ய கூடியதாக இருந்தது. ஆனால் அதன் பிற்பாடு இந்த குப்பை வெளியேற்றம் பன்மடங்காக அதிகரிக்க துவங்கியது.

இன்று மிகவும் ஆபத்தான நிலைக்கு மனிதர்களையும் உயிரினங்களையும் அது இட்டு சென்றிருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையில் சூழல் பாதுகாப்பு நிதியம் புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரிவிக்கின்றது.

இம்மாசடைதல் கட்டுப்படுத்த முடியாத நிலையினை அடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.

குப்பைகள்

மனிதர்களால் வெளியேற்றப்படுகின்ற கழிவுகள் எனும் வகையில் பிரதானமாக நெகிழி பதார்த்தங்களால் உருவான பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள், உலோகம் சார்ந்த குப்பைகள், இரசாயன கழிவுகள், இலத்திரனியல் கழிவுகள் போன்ற மிகவும் பாதகமான விளைவுகளை இயற்கைக்கு ஏற்படுத்த கூடிய மோசமாக கழிவுகளை உலகின் வல்லரசுகள் என போட்டிபோடும் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் அதிகளவில் வெளியேற்றி வருகின்றன.

அவ்வாறே சாதாரண மக்களும் இதற்கு விதிவிலக்கில்லாமல் அதிகளவில் குப்பைகளை இயற்கை சூழலில் அளவுக்கு அதிகமாக கொட்டி வருகின்றனர்.

குப்பை அகற்றல் முகாமைத்துவம்

இந்த குப்பைகளால் ஏராளமான உடனடி மற்றும் நீண்டகால விளைவுகளை நாம் எதிர்கொள்கின்றோம்.

இயற்கை வளங்களான நீர் நிலம் காற்று என்பன மாசடைந்து வருவதுடன் நீர்வாழ் மற்றும் வனவிலங்குகள் இந்த குப்பைகளால் அளவுக்கதிகமாக இன்று இறந்து வருகின்றமை மனதை உலுக்கி வருகின்றன.

இவற்றின் ஆபத்துக்களை உணர்ந்த சில வளர்ந்த நாடுகள் சிறந்த முறையில் தமது குப்பைகளை வெளியேற்றி வருகின்றன.

உதாரணம் நெகிழி பாவனையை குறைத்தல் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து குப்பை கூடைகளில் போடுதல் மற்றும் மீள்சுழற்சி செய்தல் போன்ற முறைகளை பயன்படுத்துகின்றன.

ஒவ்வொருவரதும் கடமை

எமது இயற்கையினை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். ஒரு சாரார் மாத்திரம் இயற்கையினை பாதுகாக்க முனைவதும் கணிசமான தொகையினர் இயற்கையை விற்று பிழைப்பு நடாத்துவதும் வழக்கமாகி விட்டது.

இந்த நிலையானது மாறி இங்குள்ள அனைவரும் இயற்கையினை பாதுகாக்க முன்வருகின்ற போது தான் இங்கு அனைவரும் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்.

முடிவுரை

இன்று எம்மிடையே இவ்வாறான இயற்கை சூழல் தொடர்பான புரிந்துணர்வு போதுமானதாக இல்லை. இருப்பினும் இன்று இயற்கையின் சீற்றங்களும் காலநிலை மாற்றமும் மனிதர்களுக்கு இயற்கையின் அவசியத்தை நன்றாக உணர்த்தி சென்றிருக்கின்றது என்றே கூறலாம்.

வளர்ந்த நாடுகளை போலவே எமது நாடுகளிலும் சுற்றுசூழல் பாதுகாப்பினை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

You May Also Like:

காலத்தின் அருமை கட்டுரை

ஊட்டி சுற்றுலா கட்டுரை