குடியரசு தினம் என்றால் என்ன

kudiyarasu dhinam in tamil

வாணிபம் செய்யும் நோக்கத்தில் ஆங்கிலேயர் இந்தியாவின் பல கரையோரப் பகுதிகளில் தடம்பதித்தனர். பின்னர் அவர்கள் படிப்படியாக இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

இந்தியாவை ஆண்டதுடன் கிழக்கிந்திய கம்பனியை ஆரம்பித்து இந்தியாவின் வளங்களை சுரண்டினர். இதைக் கண்டு கொதித்தெழுந்த இந்தியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தியர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

இந்நிலையில் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர்களாக பலர் உள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்தில் சத்தியமூர்த்தி, காமராஜர், வ.உ சிதம்பரனார், வ.வே.சு ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதி, வீரவாஞ்சி, கொடிகாத்த குமரன், நீலகண்ட பிரம்மச்சாரி, வேலு நாச்சியார் போன்ற பலரும்

இந்தியாவின் பிற இடங்களில் திலகர், கோபாலகிருஷ்ண கோபாலு, காந்தி, நேரு, அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா ராஜபதி ராஜ் என பலரும் உள்ளனர்.

இவர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக 1947 ஆம் ஆண்டு 15 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. எனினும் அப்போது கிடைக்கப்பெற்ற சுதந்திரம் ஆனது முழுமையான சுதந்திரம் அல்ல.

பிரிட்டி அரசு இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கி இருந்தது. இதனால் ஆங்கிலேயர்கள் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் நாட்டின் தலைவராக இருந்தார்.

மேலும் விடுதலை பெற்ற பின்பு சுதந்திர இந்தியாவிற்கு என்று நிலையான, தனியான மற்றும் சுதந்திரமான அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை. மாறாக 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் அமல்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டங்களில் சில மாற்றங்களை செய்து நடைமுறையில் வைத்திருந்தனர்.

மேலும் இந்திய விடுதலைக்கு பின்னர் இரண்டு வாரம் கழித்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி முனைவர் அறிஞர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் சுதந்திர இந்தியாவிற்கான நிலையான அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்கும் வரைவுக்குழு ஏற்படுத்தப்பட்டது.

வரைவுக்குழு உருவாக்கிய சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டங்கள் தீர ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் இந்தியா விடுதலை அடைந்த இறையாண்மை கொண்ட குடியரசு என்று அறிவிக்கப்பட்டது.

குடியரசு தினம் என்றால் என்ன

மன்னராட்சி என்பது முடியாட்சி ஆகும். மன்னராட்சியில் மன்னர் வைத்தது தான் சட்டம் ஆகும். இதில் மக்கள் சுயமாக சிந்திக்கவோ, சுதந்திரம் பற்றி நினைக்கவோ முடியாது. மன்னரின் வாரிசுகளை அடுத்தடுத்து அரியணையை ஏறுவார்கள். துணிவிருப்பவர்கள் சில சமயங்களில் ஆட்சியை கைப்பற்றுவதும் உண்டு.

ஆனால் குடியரசு என்பது இதற்கு நேர் எதிர்மாறு ஆகும். குடியரசு என்பதற்கு பொருள் குடிமக்களது ஆட்சி எனலாம். குடிமக்கள் அரசு எனவும் பொருள் கூறலாம். அதாவது மக்களாட்சி எனப்படும் மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலமாக தங்கள் தலைவர்களை தாமே தேர்ந்தெடுத்து அவர்கள் வாழும் நாட்டை ஆள்வதற்காக ஒரு தலைவனிடம் கொடுப்பார்கள். இதுவே குடியரசு எனப்படும்.

இந்தியாவின் அரசியலைப்பு உருவாக்கப்பட்டு அதனை ஏற்றுக் கொண்ட நாளான (1950) ஐனவரி 26 ஆம் நாளே குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்நாளில் ஒவ்வொரு ஆண்டும் பாரத தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட தேசத் தலைவர்களையும், தமது உயிரைத் தியாகம் செய்த தியாகிகளையும் நினைவு கூறும் வகையில் நாடு முழுவதிலும் தேசிய கீதம் பாடப்பட்டு, கொடியேற்றி இனிப்புக்கள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.

You May Also Like:

வேலுநாச்சியார் வரலாறு கட்டுரை

கல்வி கண் திறந்தவர் கட்டுரை