கிராமம் என்றாலே அனைவருக்கும் தெரியும் இயற்கை வளங்களுக்கு அங்கு பஞ்சமே இருக்காது. அங்கு வாழும் மனிதர்களும் கள்ளங்கபடம் அற்ற புனிதர்களாகவே இருப்பார்கள். கூட்டுக்குடும்பமான வாழ்க்கை அங்கு சிறப்புற்று காணப்படும். இவ்வாறான ஒரு கிராமத்தில் வாழ்வது பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.
கிராமம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இயற்கையோடு இணைந்த வாழ்க்கை
- விவசாயின் உழைப்பு
- கிராமத்து உணவு
- கிராமத்து உறவும் உபசரிப்பும்
- முடிவுரை
முன்னுரை
கிராமம் என்றாலே இயற்கைக்கு அங்கு பஞ்சமில்லை. பொதுவாகவே கிராமங்களில் பாமர மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் கள்ளங்கபடம் அற்றவர்களாகவும், விருந்தினரை நன்கு உபசரிக்க கூடியவர்களாகவுமே இருப்பார்கள்.
இந்தக் காலங்களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல நகர்களை உருவாக்கி இருந்தாலும் அந்த கிராமத்தில் வாழும் நிம்மதி எங்கும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும்.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை
செயற்கை அதிகம் நுழையாது இயற்கை மட்டுமே கிராமங்களில் காணப்படும். பொதுவாகவே ஒவ்வொரு கிராமத்திலும் குளங்கள், ஆறுகள், வயல்வெளிகள், மரம், செடி, கொடிகள் அனைத்தும் காணப்படும்.
கிராமத்து மக்கள் இயற்கையாகவே கிடைக்கின்ற காய்கறிகள் பழ வகைகளை உண்கின்றனர். அத்தோடு இயற்கை நீர் நிலைகளான குளம் ஆறுகள் என்பவற்றில் நீராடுகின்றனர்.
இயற்கை தாவரங்களை வைத்து மருத்துவம் செய்தல், கால்நடைகள் வளர்த்தல், இவ்வாறாக இவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்வதனை காணலாம்.
விவசாயின் உழைப்பு
கிராமத்து மக்களின் வாழ்வு வயலோடு இரண்டறக் கலந்ததாகவே காணப்படுகின்றது. வயல்தான் உழவர்களின் உலகம்.
ஒவ்வொரு உலகமும் காலை கதிரவனுக்கு முன் எழுந்து வயலுக்குச் சென்று மாலை சூரியன் மறையும் வரையிலும் நின்று மணிக் கணக்கில் வேலை செய்பவர்களாகவே காணப்படுகின்றனர்.
அறுவடை காலம் வரும் வரையிலும் காத்திருந்து, அறுவடைதனையும் சிறப்பாகவே முடித்து நாட்டில் உள்ள அனைவருக்கும் உண்பதற்கு உணவளிப்பவர்களே இந்த உழவர்கள் ஆவார்கள்.
கிராமத்து உணவு
கிராமத்து மக்கள் சுமார் 70, 80 வயது கடந்தாலும் அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் நோயின்றியே கடந்து கொண்டிருக்கின்றது அதற்கு காரணம் அவர்களுடைய உணவு முறையாகும்.
அதாவது அவர்களுடைய உணவு முறைகளை பார்ப்போமே ஆனால் அம்மியில் அரைத்து தான் சமைக்கிறார்கள் மற்றும் உடலில் மாவாட்டுகின்றார்கள் திருகில் அரைத்து தானியங்களை உடைக்கிறார்கள்
அத்தோடு இயற்கையாகவே வயலில் கிடைக்கக்கூடிய கீரைகளையும், காய்கறிகளையும் சமைத்து உண்கிறார்கள் மற்றும் கேப்பக்கூழ், சாமைச்சோறு, கம்மாங்கஞ்சி போன்ற சத்துள்ள உணவுகளையும் உட்கொள்கின்றார்கள் இதனாலேயே இவர்கள் நோயற்ற வாழ்வை அனுபவிக்கின்றார்கள்.
கிராமத்து உறவும், உபசரிப்பும்
கிராமத்துக்கு புதிதாக ஒருவர் வந்தால் போதும் அவரை வரவேற்று அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கும் மனப்பாங்கு கொண்டவர்களாகவே கிராமத்து மக்கள் காணப்படுவர்.
மாமா, மச்சான், அத்தை, சித்தி, சித்தப்பா என்று கிராமத்தில் உறவுகளுக்கு பஞ்சமே இல்லை. கிராமத்தில் கிடைக்கும் உபசரிப்புகள் வேறு எங்கும் கிடைப்பதில்லை.
விருந்தாளி ஒருவர் வந்தால் அவருக்கான உபசரிப்பில் எந்தவித குறைகளும் ஏற்படாத வண்ணம் அனைத்தையும் பக்குவமாக செய்து முடிப்பவர்களாகவே கிராமத்து மக்கள் காணப்படுவார்கள்.
முடிவுரை
தொழில்நுட்ப வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுள்ள இந்த உலகினில் நகரமயமாக்கும் எனும் பெயரில் எத்தனை நகரங்கள் தான் வளர்ந்தாலும் கிராமங்களுக்கு நிகராக எதுவுமே இல்லை.
தற்காலங்களில் கிராமத்து மக்கள் கலை, கலாசாரம், மருத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதனை காண முடியும். எனவே கிராமத்து வாழ்வியல் என்றுமே சிறப்புக்குரியது தான்.
You May Also Like: