காலத்தின் அருமை கட்டுரை

நேரத்தின் அருமை கட்டுரை

நேரத்தை விரயமாக்குதல் தற்கொலைக்கு சமன் என்பதை உணர்ந்து அனைவரும் காலத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

காலத்தின் அருமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நாம் ஆற்றவேண்டியவை
  • காலம் பொன் போன்றது
  • செய்ய கூடாதவை
  • வாழ்வில் வென்றவர்கள்
  • முடிவுரை

முன்னுரை

ஒருவர் வாழ்வில் உயர வேண்டுமாக இருந்தால் காலத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். காலத்தின் அருமையினை உணராதவர்கள் வாழ்வில் உயர்வதென்பது இயலாத காரியமாக உள்ளது.

இதனால் தான் நமது முன்னோர்கள் “நேரம் பொன்னானது” என்று குறிப்பிட்டார்கள் காலம் யாருக்காகவும் காத்துநிற்காது அதனை விரயம் செய்தல் நமக்கு நித்தியமான நஷ்டமாகும்.

இதனை நன்கு உணர்ந்தவர்களே வாழ்வில் வெற்றி பெறுகின்றனர். இந்த கட்டுரையில் காலத்தின் அருமை பற்றி நாம் இங்கே நோக்கலாம்.

நாம் ஆற்ற வேண்டியவை

வாழ்வின் எல்லா நேரங்களிலும் நாம் நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு அதனை விரயம் செய்யாது பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். எமது இளமை பருவத்தை நாம் கற்றலுக்காக சரியாக பயன்படுத்த வேண்டும்.

இதனால் தான் நம் முன்னோர்கள் “இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்கிறார்கள். அதுபோல ஒவ்வவொரு நாட்களையும் நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

புதிதாக ஒரு விடயத்தை கற்று கொள்ள நாம் நேரத்தை ஒதுக்குவது வாழ்வில் பயனுடையதாக அமையும்.

எமக்கு வாழ்வில் நன்மைகளை தர கூடிய மனிதர்களை சந்தித்தல் அவர்கள் வழிகாட்டல்களை பின்பற்றுதல் பயனுடைய புத்தகங்களை வாசித்தல் நமக்கு முன்னுதாரணமான மனிதர்களை பின்பற்றி நடத்தல் என்பன எம்மால் ஆற்றப்பட வேண்டிய விடயங்களாகும்.

காலம் பொன் போன்றது

எமது வழக்கத்தில் “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்ற ஒரு பழமொழி உண்டு. அதாவது உரிய நேரங்களில் நாம் உரிய விடயங்களை செய்யாது விடுவோமானால் அது பயனற்றதாக விடும்.

எமது சிறுபராயத்தில் இருந்தே எமது வருங்காலம் தொடர்பாக நாங்கள் உயரிய கனவுகளை வைத்திருக்க வேண்டும் அந்த கனவுகளை அடைவதற்கான பாதைகளை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

அவற்றுக்காக சரியான முறையில் மேலும் ஒவ்வொரு நாட்களையும் பெறமதியாக கருதி அந்த இலக்கினை அடைய சரியாக உழைத்து கொண்டே இருக்க வேண்டும்.

செய்ய கூடாதவை

இளமை பருவம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான கால பகுதியாகும். அந்த காலமே எமது வருங்காலத்தை தீர்மானிக்க போகும் காலமாகும் “இளமையில் கடினமாக உழைப்பவனே முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்வான்” என்பது உண்மையாகும்.

இந்த இளமை காலத்தில் நாங்கள் கல்வி அனுபவம் தோல்விகள் போன்றவற்றை கற்று கொள்ள வேண்டும்.

வீண் பொழுது போக்குகளான சீட்டாட்டங்கள், கேளிக்கைகள், போதைபாவனைகள், ஒழுக்க சீர்கேடுகள் ஆகிய விடயங்களை நாம் செய்யாதிருப்பதனால் எமது நேரம் எமக்கு முழுமையாக கிடைக்கும்.

வாழ்வில் வென்றவர்கள்

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்று சொல்ல கூடிய பல சாதனையாளர்களது வரலாற்றை நாம் படிப்போமானால் அவர்களது நேரமுகாமைத்துவமும் அவர்களது கடின உழைப்புமே அவர்களை உயரங்களுக்கு இட்டு சென்றிருப்பதனை எம்மால் உணர முடியும்.

இந்தியாவின் மகத்தான மனிதரான அப்துல்கலாம் அவர்கள் “உங்கள் வருங்காலத்தை செதுக்குங்கள்” என்ற புத்தகத்தில் நேரத்தை விரயமாக்குதல் தற்கொலைக்கு சமன் என்று குறிப்பிடுகின்றார்.

வாழ்வின் வெற்றிகளுக்கு காலம் ஒரு மகத்தான மந்திரம் என்பது அனைவரும் உணர வேண்டிய ஒன்றாகும்.

முடிவுரை

மாணவ மாணவிகள் காலத்தினுடைய மகத்தான சக்தியை உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று முதலே தங்களது நேரத்தை சரியாக பயன்படுத்தி கற்று கொள்ள துவங்க வேண்டும்.

சோம்பல் தனங்களை ஒழித்து ஒரு நாளிற்கான நேரத்தை திட்டமிட்டு சரியான முறையில் பயன்படுத்தி தங்கள் வருங்காலத்தை பிரகாசமாக்கி கொள்வவதுடன் தமது சமூகத்துக்கும் தமது நாட்டுக்கும் முன்னுதாரணமான பிரஜைகளாக மாறி கொள்ள வேண்டியது அவசியமாகும்.

You May Also Like:

ஆறுவது சினம் கட்டுரை

தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை