காரடையான் நோன்பு என்றால் என்ன

karadaiyan nombu in tamil

ஒரு ஆண்டில் பல பண்டிகை நாட்களை மற்றும், விரத நாட்களை அனுஷ்டிப்பதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் வழிபடக்கூடிய விரத நாட்களாகச் சில விரத நாட்கள் உள்ளன.

திருமணமான பெண்கள் தீர்க்கசுமங்கலியாகத் திகழ வேண்டும் என்பதுதான் பெண்களின் மிகப்பெரிய ஆசை, கனவு, விருப்பம். அதற்கு கணவரின் ஆயுள் பலம் வேண்டும்.

அந்தவகையில் தீர்க்க சுமங்கலி வரம் பெற வேண்டும் எனவும், தன் கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் எனவும் எண்ணி கடைபிடிக்கும் விரதங்களில் முக்கியமான விரதமாக காரடையான் நோன்பு விளங்குகின்றது.

இந்த காரடையான் நோன்பானது சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கௌரி விரதம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுவதுண்டு.

காரடையான் நோன்பு என்றால் என்ன

எமனோடு போராடி தன் தாலி பாக்கியத்தை காப்பாற்றி கணவனின் உயிரை மீட்டுக் கொண்டு வந்து இழந்த ராஜ்யத்தில் கணவரை மீண்டும் ராஜாவாக அமரச் செய்து சுமங்கலியாக இருந்து உலக மக்களுக்கு குறிப்பாக, பெண்களுக்கு அற்புதமான முன்னுதாரணமாக திகழ்ந்த சாவித்திரி தேவி தோற்ற விரதமே காரடையான் நோன்பு ஆகும்.

வரலாறு

மந்திரதேசத்து மன்னன் அஸ்பவதி ஒரு நாள் நாரதரிடம் தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததை கூறி மனம் வருந்தினார். காரடையான் நோன்பு இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார் நாரதர். அதன்படி மன்னருக்கு சாவித்திரி பிறந்தாள்.

கல்வி, கலைகளைக் கற்று தந்து வீரமங்கையாக மகளை வளர்த்தார். ஒருநாள் வேட்டைக்கு காட்டிற்கு சென்ற சாவித்திரி, காட்டில் போரில் நாட்டை இழந்த சாலுவ தேசத்து மன்னனான சால்வன், அவரது மனைவி மற்றும் மகன் சத்தியவாணன் ஆகியோரைச் சந்தித்தாள்.

சால்வனும் அவனது மனைவியும் பார்வைக்குறை உள்ளவர்களாவர். அவர்களைப் பாசமுடன் சத்தியவான் கவனிப்பதைப் பார்த்த சாவித்திரி அவன் மீது காதல் கொண்டாள். இவரே தனக்கு ஏற்ற கணவன் என்த் தீர்மானித்தாள். விடயத்தை தன் தந்தையிடம் தெரிவிக்க அவரும் சம்மதித்தார்.

மந்திர தேசம் வந்த நாரத மகரிஷியிடம் மகளின் விருப்பத்தை அஸ்வவதி தெரிவித்தார். சத்தியவானுக்கு ஆயுள் காலம் குறைவு என்பதனால் எமன் அவனை நெருங்கும் காலம் வரப்போகின்றது என எச்சரித்தார் நாரதர். ஆனாலும் மன உறுதியுடன் சத்தியவானனைக் கணவனாக சாவித்திரி அடைந்து, அரண்மனை வாழ்வைத் துறந்து காட்டிற்குச் சென்றாள்.

மாமனார், மாமியாரைப் பணிவுடன் கவனித்தாள். காலமும் வேகமாக ஓடியது. சத்தியவாணனின் ஆயுள் முடியும் காலம் நெருங்கியது. சத்தியவான், சாவித்திரி இருவரும் காட்டிற்கு விறகுகளை சேகரித்து வர சென்றனர். வேலைக்கு நடுவே மிகவும் களைப்பாக இருப்பதால் சிறிது நேரம் மரத்தினடியில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.

சாவித்திரி மடியில் தலை வைத்து படித்திருந்த சத்தியவாணனின் தலை கீழே தழுவியது. கணவனின் உயிரை எமன் கவர்ந்து செல்வது போல அவளுக்குத் தெரிந்தது. தன் கற்புத் திறத்தால் எமனைப் பின்தொடர்ந்தாள்.

எமனுடன் போராட்டத்தை கண்ட எமராஜன் என்ன வரம் வேண்டும் கேள்? என்று கேட்கிறார். சாவித்ரி சாதுர்யமாக, என் கற்பிற்கு பங்கம் வராமல் 100 குழந்தை வேண்டும் என்று கேட்கிறார்.

அந்த நூறு குழந்தையையும் தன் மாமனார், மாமியார் கண் குளிர பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் கேட்கிறாள். அப்படியே ஆகட்டும் என்று சற்றும் யோசிக்காமல் எமதர்மராஜனும் வரம் அளித்து விடுகின்றார்.

You May Also Like:

அஷ்டமி அன்று செய்ய கூடாதவை

கர்ம சனி என்றால் என்ன