காந்தியின் அகிம்சை கட்டுரை

gandhiyin ahimsai

காந்தியின் அகிம்சை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • காந்தியடிகளின் பிறப்பு
  • சுதந்திரப்போரில் காந்தியின் பங்கு
  • காந்தியடிகளின் இறப்பு
  • அரசினால் வழங்கப்பட்ட கௌரவம்
  • முடிவுரை

முன்னுரை

“இந்தியாவின் தந்தை” என அனைவராலும் அழைக்கப்படுகின்ற, அனைத்து இந்தியர்களின் மனங்களிலும் நீங்கா இடத்தைப் பெற்ற மகாத்மா காந்தி இந்திய வரலாற்றில் மிகமுக்கியமான ஒருவராவார்.

அகிம்சையே உலகின் மிகப்பெரிய சக்தி என உலகிற்கு எடுத்தியம்பிய காந்திஅடிகளின் வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

காந்தியடிகளின் பிறப்பு

காந்தியடிகள் இந்தியாவின் குஐராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் கிராமத்தில் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்லிபாய் ஆகியோருக்கு மகனாக 1869ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகனதாஸ் காந்தி என்பதாகும்.

சிறுவயதிலிருந்து கல்வியை முறையாகப் பெற்ற இவர் தனது 18வது வயதில் இங்கிலாந்து சென்று வழக்கறிஞராகி பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் ஆங்கிலேயருடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் தென்னாபிரிக்காவிற்கு சென்றார்.

சுதந்திரப்போரில் காந்தியின் பங்கு

தென்னாபிரிக்காவில் காணப்பட்ட நிறவேறுபாடு அவரை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது. ஆபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தனர். அவர்களிற்கு ஆதரவாக பல்வேறு அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டர்.

இந்தியாவிற்கு வருகைதந்த காந்தியடிகள் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து மாபெரும் அறவிடுதலைப் போராட்டங்களை மேற்கொண்டார். வெள்ளையர்களால் விதிக்கப்பட்ட உப்பு வரியை எதிர்த்து முதல் முதலில் “உப்பு சத்தியாகிரகம்” எனப்படும் போராட்டத்தை ஆரம்பித்து வெற்றியும் கண்டார்.

1942ம் ஆண்டு காந்தியடிகள் பங்கு பற்றிய “வெள்ளையனே வெளியேறு” எனும் போராட்டம் மற்றும் பல அகிம்சை வழியிலான பல போராட்டங்களின் விளைவாக இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

காந்தியடிகளின் இறப்பு

காந்தியடிகள் இறந்த சம்பவமானது வரலாற்றில் மிகப் பெரிய துக்கதினமாக அமைந்தது. 1948ம் ஆண்டு ஐனவரி 30ம் திகதி நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொலைசெய்யப்பட்ட போது காந்தியடிகள் புதுடில்லியில் அமைந்திருந்த தோட்டத்தில் தனது சுற்றத்தாரின் உதவியுடன் கூட்டுப் பிரார்த்தனைக்காக சென்று கொண்டிருந்தபோது பகிரங்கமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவமானது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அரசினால் வழங்கப்பட்ட கௌரவம்

அகிம்சை வழியில் நின்று இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த காந்தியடிகளிற்கு இந்தியஅரசு பல்வேறு கௌரவங்களை வழங்கியது. இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் முதன்முதலில் “மாகாத்மா” என்ற உயரிய பட்டத்தை வழங்கி வைத்தார்.

அதனைத் தவிர “தேசபிதா”, “தேசதந்தை” என சிறப்பான பெயர்களாலும் சிறப்பிக்கப்பட்டு வருகின்றார்.

இந்திய அரசு காந்தியடிகளின் பிறந்த நாளை “காந்தி ஜெயந்தி” என ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடி வருகின்றது. அதனைத் தவிர இந்தியாவின் அனைத்து இடங்களிலும் காந்தியடிகளின் சிலைகள் அமைக்கபட்டுள்ளதோடு, அவரைப் பற்றிய சிறுகுறிப்புக்கள் பாடப்புத்தகத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முடிவுரை

மகாத்மா காந்தி அடிகள் அவரது வாழ்வில் சந்தித்த போரட்டங்கள் மற்றும் தனது வாழ்க்கை குறித்தான சுயசரிதை நூலை “சத்திய சோதனை” என்ற பெயரில் வெளியிட்டார்.

ஆயுதங்களை பிரயோகித்து வன்முறையில் ஈடுபடுவதற்கு மாறாக அகிம்சை வழியில் போராடினாலும் வெற்றி கிடைக்கும் என்பதற்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

You May Also Like:

விவசாயம் பற்றிய கட்டுரை

தூய்மை இந்தியா கட்டுரை