காசநோய் மனித வர்க்கம் உற்பத்தியான காலத்திலிருந்து உருவான ஒரு நோயாகும். அன்றிலிருந்து இன்றுவரை உலகை அச்சுறுத்தும் உயிர் கொல்லி நோயாகவே இருந்து வருகின்றது.
காசநோய் விழிப்புணர்வு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காசநோய் ஏற்பட காரணங்கள்
- நோய்க்கான அறிகுறிகள்
- தடுப்பு முறைகள்
- சிகிச்சை
- முடிவுரை
முன்னுரை
உலகில் பல உயிர்க்கொல்லி நோய்கள் காலத்து காலம் தோன்றி மனித குலத்தை பழிவாங்கிக் கொண்டே இருக்கின்றன. எகிப்தின் பூத உடல்களில் காசநோய் இருந்ததற்கான தடயங்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாகும். இந்நோயானது என்புருக்கு நோய் என்றும் அழைக்கப்படுகின்றது.
காச நோய் ஏற்படக் காரணங்கள்
ஆரம்ப காலத்தில் காச நோயை ஒரு பயங்கர வியாதியாகவே மக்கள் கருதினார்கள். இந்நோயானது இருமும் போதும் சளியை வெளியே தும்மும் போதும் காற்றின் மூலமாகவே பரவுகின்றது.
ஒரு சிறிய காற்று துளியே வேறு ஒருவருக்கு புதிய தொற்று ஏற்படுத்த போதுமானது. அவ்வாறே நோயுள்ள ஒருவருடன் தொடர்ந்து அல்லது அதிகப்படியான பழக்கம் இருப்பவர்கள், காசநோய் அதிகமாக இருக்கும் இடத்தில் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், காச நோயாளிகளுக்கு உதவும் மருத்துவர்கள், பணியாளர்கள் போன்றோருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
நோய்க்கான அறிகுறிகள்
காச நோய் தொற்றுக்கொள்ளானவர்களிடம் பலவகையான அறிகுறிகள் காணப்படும். அவையாவன உடற்சோர்வு, உணவு விருப்பமின்மை, நீடித்த காய்ச்சலும் இருமலும், மஞ்சட் சளி, நெஞ்சு நோவு, அடிக்கடி தடிமன், சிலரில் இரவு நேர அதிக வியர்வை, இருமலுடன் அதிகளவு குருதி வெளியேறல், குளிர், எடை இழப்பு போன்றவை ஆகும். ஆகவே, இந்த அறிகுறி உள்ளவர்கள் சளியை பரிசோதித்து பார்ப்பது சிறந்ததாகும்.
தடுப்பு முறைகள்
காச நோயாளிகள் காற்றோட்டம் உள்ள அறையில் இருப்பது நன்று, காச நோயாளிகள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்நோயை முழுமையாக தடுப்பதற்கு ஊசி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு BCG தடுப்பூசி போட வேண்டும்.
உலக சுகாதார அமைப்பு 1996 ஆம் ஆண்டிலிருந்து காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக மார்ச் 24 ஆம் திகதியை அறிவித்தது.
சிகிச்சை
இது பாக்டீரியாவால் ஏற்படுவதால் காச நோய்க்கு தொற்று நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படலாம். முறையான சிகிச்சையானது பொதுவாக வாரத்திற்கு மூன்று முறை குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் பெரும்பாலும் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதில்லை. இருப்பினும் சிகிச்சையை நிறுத்துவது காலப்போக்கில் கடுமையான பாதிப்புகளையும் செலவுகளையும் ஏற்படுத்தும்.
முடிவுரை
ஆவாரம் பூ, ஏலக்காய், சுக்குத் துண்டு இவைகளை இடித்து கொதித்த நீரில் சேர்த்து பருகுவதால் காச நோயை கட்டுப்படுத்தலாம் என்பதே நம் முன்னோர்கள் கற்றுத் தந்த வரப்பிரசாதமாகும்.
அதுமட்டுமன்றி காச நோயை தடுக்கும் வகையிலான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே இது மக்கள் பாவனைக்கு வரும் வரை நாம் அனைவரும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.
காச நோயானது உயிர் கொல்லி நோயாக இருப்பதனால் அவற்றை தடுப்பதே நமது கடமையாகும்.
You May Also Like: