வணக்கம் வாசகர்களே! இந்த பதிவினைப் பார்க்கும் அனைவரும் நிச்சயமாக தங்கள் அழகின் மீது மிகமிக அக்கறை கொண்டவர்கள் என்று நம்புகின்றேன். நம்மில் பலரும் முகங்களில் அழகினைக் குறைக்கும் பருக்கள் வருவதை விரும்புவதில்லை.
பருக்கள் முகத்தில் வந்தவுடனேயே நாம் அவற்றை கிள்ளி விடுகின்றோம். அந்த தழும்புகளே நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றன. இன்றைய இந்த பதிவில் நாம் கரும்புள்ளிகள் மறைவதற்கான இயற்கையான எளிய வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
கரும்புள்ளி மறைய டிப்ஸ்
#1. உருளைக் கிழங்குகளை வெட்டி முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்துவர சில நாட்களின் பின்னர் கரும்புள்ளிகள் நிச்சயமாக மறைந்துவிடும்.
#2. கறிவேப்பிலை சாறு மற்றும் மஞ்சள் போன்றவற்றை சேர்த்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவிவர கரும்புள்ளி மறைந்து விடும்.
#3. பாதாம் பருப்பு பொடி, எலுமிச்சை சாறு போன்றவற்றை ½ ஸ்பூன் அளவில் எடுத்து அவற்றுடன் 1ஸ்பூன் கடலைமாவுடன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி ½ மணி நேரத்தின் பின்னர் முகத்தைக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
#4. இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர கரும்புள்ளிகள் சில காலங்களில் மறைந்து விடும்.
#5. ஜாதிக்காயை அரைத்து தூளாக்கி முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து அதன் பின்னர் கழுவி வர சில நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
#6. வெந்தயக் கீரையை நன்றாக அரைத்து பேஸ்ட் போன்ற பதத்தில் எடுத்து முகத்தில் பூசி காயவைத்து சிறிது நேரம் கழித்து முகத்தினைக் கழுவிவர சில நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
#7. இலுப்பை மர இலையை நன்றாக அரைத்து பேஸ்ட் போன்ற பதத்தில் தினமும் இரவில் தூங்கும் முன்பு பூசி காலையில் முகத்தினை கழுவிவர சில நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
#8. கொத்தமல்லி மற்றும் மஞ்சள் இரண்டினையும் நன்றாக அரைத்து முகத்தில் பூசி சிலமணி நேரம் காய வைத்து முகத்தைக் கழுவிவர கரும்புள்ளி மறந்து விடும்.
#9. அரிசி மாவை தண்ணீரில் கலந்து கிரீம் போல கலக்கி முகத்தில் பூசி சில மணி நேரம் கழித்து கழுவி வர சில காலங்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
#10. கடலை மாவு 1ஸ்பூன், 2ஸ்பூன் பால், 1ஸ்பூன் உப்பு, போன்றவற்றைக் கலந்து பேஸ்ட் போன்ற பதமாக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் வரை காய வைத்து பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு 2- 3 வாரங்கள் செய்து வர கரும்புள்ளிகள் நீங்கும்.
சருமத்தின் மீது அக்கறை கொண்டு அதனைப் பராமரிப்பதற்கு சிறந்த வழிமுறைகளைக் கையாள்வது நல்ல பண்பே ஆனால் பலர் விடும் தவறு என்னவெனில் தமது சருமத்தை பாதுகாக்கின்றோம் என்னும் எண்ணத்தில் பல இரசாயனம் கலந்த கிரீம், ஸ்கிறப் வகைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இவை உடலுக்கு உடனடி தீர்வுகளைத் தந்தாலும் கூட அவை உடலுக்கு பிற்காலத்தில் பல பக்கவாத விளைவுகளையும் நோய்களையும் தரும் அதனால் இயலுமான வரை நாம் இரசாயன அழகுக் குறிப்புக்களைத் தவிர்த்து இயற்கையான வழியினைப் பின்பற்றி சருமத்தின் ஆரோக்கியத்தினைப் பாதுகாப்போம்.
You May Also Like: