கம்பர் இயற்றிய நூல்கள் யாவை

கம்பர்

கம்பர் இயற்றிய நூல்கள் யாவை

சிலையெழுபது
சடகோபர் அந்தாதி
சரசுவதி அந்தாதி
திருக்கை வழக்கம்
கம்பராமாயணம்
ஏரெழுபது
மும்மணிக்கோவை
கம்பர் தனிப்பாடல்கள்

கம்பர் அறிமுகம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பராமாயணமே மிகப் பெரிய இதிகாசமாக குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் ஆவார்.

கம்பர் 12ம் நூற்றாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவழுந்தூர் என்று அழைக்கப்படும் தேரழுந்தூர் என்னும் ஊரில் ஆதித்தன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். கம்பரின் மகன் அம்பிகாபதி ஆவார்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த கம்பர் சடையப்பர் என்ற சிற்றரச வள்ளலின் ஆதரவில் பிற்காலத்தில் வளர்ந்து வந்தார். சடையப்ப வள்ளல் ஒரு திரிகார்த்த சிற்றரசன் ஆவார். சடையப்பரே கம்பரை இளமைக்காலத்திலே இருந்து பேணிக் காத்து ஆதரித்து வந்தார்.

சோழ இராச்சிய மன்னன் கம்பருக்கு கம்ப நாடு என்ற பகுதியை கொடுத்துள்ளார்.கம்பரின் கவியாற்றலைப் பாராட்டி கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார்.

கம்பரின் இளமைக்காலம்

வள்ளி எனப்படும் தாசி ஒருவரைக் கம்பர் காதலித்துள்ளார். ஆனால் தாசியைத் திருமணம் செய்யவில்லை. இதை விட வேறொரு பெண் கம்பரை காதலித்த போதிலும் கம்பர் அவளுடைய காதலை ஏற்கவில்லை என கம்பருடைய இல்லறவியல் பற்றி தமிழ் நாவலர் எனப்படும் சரிதியில் சில செய்யுள்களில் விபரிக்கப்பட்டுள்ளது.

இலக்கியப் பணி

கம்பர் தமிழ்மொழியில் மிகச்சிறந்த கவிஞர், மற்றும் நூலாசிரியர் ஆவார். இவரை உலகறியச் செய்தது கம்பரால் எழுதப்பட்ட கம்பராமாயணம் ஆகும். இவர் எழுதிய அக் காலத்தில் அதனை எழுதிய பலரும் அவரைப் பாராட்டி உள்ளனர்.

அவர்களுள் பாண்டிய மன்னன், காகதிய ருத்திர மன்னன் போன்ற மன்னர்கள் சிலர் ஆவார். இவருடைய கவித்திறனைப் பாராட்டி “கல்வியிற் பெரியோன் கம்பன்” , “கவிச்சக்கரவர்த்தி” போன்ற பட்டங்கள் சூட்டப்பட்டுள்ளன.

தமிழ் மொழியில் கம்பரின் கவித் திறமையால் “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்” என்ற முதுமொழி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பராமாயணத்தில் தசரதன் மகனைப் பிரியும் வேளையில் அவருக்கான பாடல்களில் புத்திரசோகம் அதிகம் வெளிப்படுகின்றது. அதற்கு காரணம் கம்பரின் மகன் அம்பிகாபதி ஆவார்.

அவர் கவிஞனாக சோழ மன்னனின் அரசவையில் இருந்த காலத்தில் மன்னனின் மகளான அமராவதி என்பவரை காதலித்துள்ளார். இதனை அறிந்த மன்னன் அம்பிகாபதியைக் கொன்று விட்டார். இதன் காரணமாகவே கம்பராமாயணத்தில் புத்திரசோகம் அதிகம் வெளிப்படுவதாக நம்பப்படுகின்றது.

இவ்வாறு மகனைக் கொன்ற காரணத்தால் சோழ மன்னனுடன் கம்பருக்கு பிணக்கு ஏற்பட்டது. இதனால் சோழ நாட்டை விட்டு வெளியேறி ஆந்திர பிரதேசத்திற்கு சென்று அங்கு வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

இவர் இதிகாசம் கம்பராமாயணம் தவிர வேறு சில நூல்களையும் எழுதியுள்ளார். சிலையெழுபது, சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, மும்மணிக்கோவை போன்ற நூல்களையும் கம்பர் தனிப்பாடல்கள் என்ற தனிப்பாடல்தொகுப்பினையும் எழுதியுள்ளார்.

கம்பராமாயணம்

கம்பராமாயணம் என்பது வடமொழியில் வான்மீகியால் எழுதப்பட்ட நூலின் மொழிபெயர்ப்பு நூலாக அல்லாது வான்மீகியின் இராமாயணத்தை மூல நூலாகக் கொண்டு சில காண்டங்களை விடுத்து மூல நூலின் வழிவந்த ஒரு தழுவல் நூலாகக் காணப்படுகின்றது.

கம்பராமாயணத்திற்கும் வான்மீகியின் இராமயணத்திற்கும் இடையே பல தரப்பட்ட வேறுபாடுகள் காணப்படுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவுக்கின்றன.

கம்பரின் புகழ் பாடியவர்கள்

கம்பரின் புகழை “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” எனவும் “அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி” என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும்

“தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச்சிறப்பே” என நாமக்கல் கவிஞரும் பாடியுள்ளனர்.

கம்பருக்காக நினைவிடங்கள்,  மணி மண்டபம், கம்பன் கழகம் போன்ற நினைவுத் தூபங்கள் அமைக்கப்பட்டு அவர் புகழ் இன்று வரை சிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

You May Also Like:

தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் யார்

உ.வே.சாமிநாதய்யர் பற்றிய கட்டுரை