இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களில் ஒன்றாக கணினி மாறிவிட்டது. மனிதனின் அன்றாட வாழ்வியலில் கணினியும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. கணினி பலதரப்பட்ட துறைகளில் தனது பங்களிப்பை வழங்குகிறது.
கணினியின் பயன்கள்
1. மனிதனது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தல்
கணினிகளானது மக்களின் வேலைகளைச் சுலபமாக மாற்றுகின்றது. ஒவ்வொரு மனிதனது தேவைகளையும் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் அறிவினை வளர்க்கவும் கணினி அளப்பெரும் பங்காற்றுகின்றது. தினமும் மனிதர்கள் தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்வதற்கும் கணினி உதவுகிறது.
2. கல்வி
மாணவர்கள், உயர்கல்வி பயில்வோர், தொழில் செய்வோர் என பலதரப்பட்டவர்களுக்கும் ஆங்கிலம், கணிதம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கை வேலைப்பாடுகள், புத்தாக்கம் போன்ற பல பாடங்களில் அறிவினை வளர்க்க கணினி உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் கணினியில் கற்பவற்றை சேமித்து வைக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
3. தரவுகளை சேமிக்கும் வசதி
கணினியில் தட்டச்சு செய்யக்கூடிய அனைத்து தரவுகளையும் தகவல்களாக சேமிக்க முடிவதோடு தேவையான நேரத்தில் அவற்றை மீளவும் விரைவாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.
4. சிறந்த பொழுதுபோக்கு அம்சம்
சிறுவர்கள் முதல் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பெற்றோர்கள் வரை அனைவருக்கும் கணினி பல பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது. கணினியில் பல விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. இத்தகைய பொழுதுபோக்கு அம்சங்கள் மனிதர்களது மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. மருத்துவத்துறை
இன்றைய மருத்துவத் துறையில் பல வைத்தியர்கள் தெரியாத நோய்களையும் கணினியின் மூலமாக கண்டறிந்து வைத்தியம் செய்கின்றனர். ஆய்வுகள், மருந்துகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றுக்கு கணினி உதவி செய்கிறது.
6. ஒருவருடன் தொடர்பு கொள்ள உதவுகிறது
உலகில் எந்த மூளையில் இருப்பவர்களுடனும் கணினியில் இணையம், மின்னஞ்சல், ஸ்கைப் வழியாக தொடர்பு கொள்ள முடியும். எந்த தொலைவில் இருந்தாலும் நாம் நமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் போன்றவர்களுடன் முகம் பார்த்து உரையாடி தொடர்பு கொள்ள முடியும்.
7. தொழிற்துறை
பெரும்பாலான தொழில் புரியும் இடங்களில் அங்கு வேலை புரியும் ஊழியர்களது விவரங்களை சேகரித்தல், வரவு செலவு, சம்பளம், கடிதங்கள் தயாரித்தல், போன்ற பல தரவுகளை சேமிக்க கணினி உதவுகிறது. கணினி ஒரு பொதுப்பதிவேடு வைப்பதற்காகவும் பயன்படுகிறது.
8. தகவல்களை பாதுகாக்கலாம்
கணினிகளில் தகவல்களை இரகசியமாக கடவுச்சொல் மூலம் பாதுகாக்க முடியும். இதனால் நாம் நம்முடைய தகவல்களை ஏனையவர்களிடம் இருந்து பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
9. போக்குவரத்து துறை
விமானம், பேருந்து, புகையிரதம் போன்ற பல போக்குவரத்து வாகனங்களில் பயணம் மேற்கொள்வதற்கான பயணச் சீட்டுக்களுக்கு ஒன்லைன் மூலம் முற்பதிவு செய்து தங்கள் பயணத்தை இலகுவாக மேற்கொள்ள கணினி உதவுகிறது.
10. அறிக்கைகள் தயாரித்தல்
கைகளால் எழுதும் அறிக்கைகளை நம் மனநிறைவுக்கு ஏற்றாட் போல் நேர்த்தியாக எழுத முடியாது. ஆனால் கணினியில் நமது தேவைக்கு ஏற்றாட்போல் எழுத்து வடிவங்ககளை மாற்றி அமைக்கலாம். அதுமட்டுமல்லாமல் பல தரப்பட்ட வண்ணங்கள், வடிவங்களைப் பயன்படுத்தி தெளிவுடனும் அழகாக அறிக்கைகளை உருவாக்கலாம்.
11. வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள முடிதல்
வேலையின்றி அவதிப்படுபவர்கள் தாம் கற்ற கல்விக்கு ஏற்றாட்போல் தமக்குரிய சுயவிபரக் கோவைகளை தயாரித்து தமது தகுதிக்கு ஏற்ற புதிய வேலை வாய்ப்புக்களுக்கான வெற்றிடம் எங்கு காணப்படுகின்றது என கண்டறிந்து ஒன்லைன் மூலமாக விண்ணப்பித்து வேலைகளைப் பெற்றுக்கொள்ள கணினி உதவுகிறது.
You May Also Like: