இந்தியாவில் காணப்படுகின்ற சுற்றுலாத்தலங்களுள் சிறப்பான சுற்றுலா தலமாக ஊட்டி காணப்படுகிறது.
ஊட்டி சுற்றுலா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அமைவிடம்
- சிறப்புகள்
- அரச தாவரவியல் பூங்கா
- உதகைமண்டல ஏரி
- முடிவுரை
முன்னுரை
இந்திய அரசாங்கத்தால் உதகை மண்டலம் என அழைக்கப்படும் அதிக மக்களால் விரும்பப்படும் சுற்றுலாத் தலமாக ஊட்டி காணப்படுகின்றது. ஊட்டி “மலைகளின் இளவரசி” என்றும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பூங்கா, அருங்காட்சியகம், மலைகள், நீர்வீழ்ச்சிகள், ஏரி என பல்வேறு இயற்கை வளங்களை கொண்டு அனைத்து சுற்றுலா பயணிகளையும் கவரும் ஊட்டி பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் நோக்குவோம்
அமைவிடம்
இந்தியாவின் பிரசித்தமான சுற்றுலா தலமாக காணப்படுகின்ற ஊட்டி, அதிக மலைப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விடமானது கிழக்கு தொடர்ச்சி மலைகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் சங்கமிக்கும் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிகமாக 11°செல்சியஸ் வெப்பநிலையே நிலவுகிறது. இது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா எனும் மூன்று மாநிலங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
சிறப்புகள்
இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்கள் ஒன்றான ஊட்டியில் எப்போதும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளங்கள் மிகுந்த வனப்பகுதிகள் பல காணப்படுகின்றமையினால் இந்தியாவின் பிற மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா என்னும் விழா சிறப்பாக நடத்தப்படுகின்றது. இவ்விழாவின்போது மலர் கண்காட்சிகள் நாடத்தப்படுவதனால் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
அத்துடன் அரசு தாவரவியல் பூங்கா, உதகமண்டலம் ஏரி, பைன் வன வருகை, மான் பூங்கா, பனிச்சரிவு ஏரி, தொட்டாபெட்டா எனும் உயர்ந்த சிகரம், கேத்தி பள்ளத்தாக்கு, மேல் பவானி ஏரி, எமரால்டு ஏரி, புனித ஸ்டீபன் தேவாலயம், படப்பிடிப்பு மையம் என பல சுற்றுலா இடங்களை ஒரே இடத்தில் கொண்டு இயற்கை வளங்களோடு காணப்படுகிறது.
ஊட்டியில் அமைந்துள்ள ரோஸ் கார்டன் 2006ஆம் ஆண்டு சர்வதேச ரோஸ் சங்கத்தினால், தென்கிழக்காசியாவில் உள்ள சிறந்த ரோஜா தோட்டத்திற்கான சிறந்த விருதை பெற்றுக் கொண்டது.
அரசு தாவரவியல் பூங்கா
உதகை மண்டலத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவானது, 55 ஏக்கர் பரப்பளவு பல ஆண்டுகளாக அதிகம் பார்வையாளர்களை கவரும் சுற்றுலாத்தலமாக காணப்படுகிறது.
இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 200400 தொடக்கம் 2500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா 1897 ஆம் ஆண்டில் ட்வீடேலின் மார்க்விஸ் என்பவரால் வில்லியம் கிரஹாம் மெக்ஐவர் என்பவரை வடிவமைப்பு கலைஞராக கொண்டு நிறுவப்பட்டது.
இங்கு 600 வகையான தாவர இனங்கள் பயிரிடப்பட்டு, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
ரோஸ் கார்டன் ஹெல்ப் மலையின் சரிவுகளில் அமைந்துள்ளது. இது நிலா மேடம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு 2241 வகையை சேர்ந்த சுமார் 20,000 மேற்பட்ட ரோஜா பூக்களின் தொகுப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறு இந்த அரசு தாவரவியல் பூங்காவில் பூக்கும் மலர்களை பார்க்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் முகமாக ஆண்டுதோறும் இங்கு மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
உதகைமண்டல ஏரி
உதகை மண்டலத்தில் (ஊட்டியில்) காணப்படுகின்ற சிறந்த படகு சவாரி செய்யும் பயணதளங்களுள் உதகமண்டல ஏரியும் ஒன்றாக காணப்படுகிறது. இது உதகை படகு எல்லாம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
அழகிய உதகை ஏரி அமைதியான பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக காணப்படுகிறது. இந்த உதகை ஏரியானது, 1824 ஆம் ஆண்டு ஜான் சல்லீவன் என்பவரால் கட்டப்பட்ட செயற்கையான ஓர் ஏரி ஆகும்.
இது 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியாகும். ஆரம்பத்தில் மீன் பிடிப்பதற்காக கட்டப்பட்ட இந்த ஏரியினை 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கையெடுத்து சுற்றுலா பூங்காவாக மாற்றியது.
மே மாதம் இங்கு நடைபெறுகின்ற கோடை விழாவில் ஒரு பகுதியாக இந்த ஏரிகளில் படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஏரிக்கு அருகில் ஒரு தோட்டம், ஒரு சிறு ரயில் மற்றும் ஒரு பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கேளிக்கை பூங்காவில் பேய் வீடு, கண்ணாடி வீடு மற்றும் குதிரை சவாரி போன்ற வேடிக்கையான செயல்பாடுகள் பல காணப்படுகின்றன.
இவைகள் குழந்தைகளுக்கு உற்சாகமான அனுபவத்தை வழங்குகி அவர்களை கவருகின்றன. இவ்வாறு பல சுற்றுலா தளங்கள் ஊட்டியில் காணப்படுகின்றது.
முடிவுரை
பல சிறப்பான சுற்றுலா தலங்களைக் கொண்டு காணப்படுகின்ற உதகை மண்டலம் எனப்படும் ஊட்டியானது கோடை விடுமுறையில் குளிர்ச்சியான இதமான காலநிலையை வழங்கும் ஓர் இதமான இடமாக காணப்படுகிறது.
அத்துடன் பல அரியவகை தாவரங்களையும் கொண்டு கண்ணுக்கும் மனதிற்கும் அமைதி தரும் வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே அதிகப்படியான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.
You May Also Like: