உணவே மருந்து கட்டுரை

unave marunthu katturai

உடல் நலத்தை நாம் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே தீர்மானிக்கின்றன. சிறந்த உணவு என்பது அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது.

இயற்கை உணவு முறையையும் அதனுடன் இணைந்த பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் நலத்தை மட்டுமல்லாது உள நலத்தையும் பாதுகாக்க முடியும்.

உணவே மருந்து கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உணவு முறைகளும் நமது ஆரோக்கியமும்
  • உணவின் தேவை
  • இயற்கை உணவுகள்
  • மாறிவரும் உணவு முறைகள்
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகத்திலுள்ள மனிதர்கள், விலங்குகள் உட்பட ஏனைய அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ உணவு மிகவும் அவசியமாகும். எனவே தான் மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றிலும் உணவே மிகவும் முதன்மையானதாக கருதப்படுகின்றது.

உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை. சிறந்த உணவுகளை சரியான நேரத்தில் உண்ணுதல் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறையாகும். எனவே நாம் உணவிற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

உணவு முறைகளும் நமது ஆரோக்கியமும்

நம் முன்னோர்கள் அடிக்கடி ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்’ என்று கூறுவார்கள். அதுபோலவே தான் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்கையை சிறப்பான முறையில் வாழ முடியும்.

நல்ல வளமான நிலத்தில் வளரும் பயிர் போல ஆரோக்கியமான உணவுகளான இயற்கையாக விளைகின்ற பழ வகைகள், தானியங்கள், காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும் மனிதனும் வளமாக வாழ முடியும்.

உணவின் தேவை

நாம் தினமும் உண்ணும் உணவுகளில் எந்த உணவு நம் உடலிற்கு பொருத்தமானது என்பதை தெரிவு செய்து உண்பதே சிறந்த மருந்தாக அமைகிறது. நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணும் போது எந்த விதமான நோய் நொடிகளும் நம்மை நெருங்காது.

ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை வட்டத்தில் யாருக்குமே சத்துக்கள் நிறைந்த உணவை சமைத்து உண்பதற்கு நேரம் இல்லை. இதனால் உணவுகளை கொள்வனவு செய்வதையே விரும்புகிறார்கள்.

இயற்கை உணவுகள்

கிருமி நாசினிகள் தெளிக்கப்படாத இயற்கையான முறையில் பெறப்பட்ட தானிய வகைகள், கிழங்குகள், கீரைகள், பசும்பால் உணவுகள், பழங்கள் போன்ற இயற்கையான உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை ஆகும்.

ஆனால் இன்றைய விவசாயத்தில் பெரும்பாலும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இது மனிதர்களுக்கு நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தி விடும். இயற்கை சார்ந்த உணவுகளை அதிகமாக உண்பதன் மூலம் உடலில் நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழ முடியும்.

மாறிவரும் உணவு முறைகள்

இன்றைய சூழலில் அனைவரும் உடலுக்கு பாதிப்பை தரக்கூடிய உணவுகளையே பெரிதும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

நாகரீக வளர்ச்சியின் காரணமாக நம்முடைய இயற்கை உணவு முறைகளும் அடியோடு மாறிவிட்டது. கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதோடு பல நோய்களும் ஏற்படுகின்றது.

முடிவுரை

மனிதன் இன்று பொருளாதார நிலை, தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞானம் என்று நாட்டின் வளர்ச்சியை மட்டுமே யோசிப்பதால் மனிதருடைய உடல் ஆரோக்கியம் பற்றி யாரும் நினைத்து பார்ப்பதில்லை.

எனவே ஆரோக்கியமான உணவை உண்டு நோய் நொடிகள் வருமுன் நம்மை நாமே காப்பதே சிறந்தது. ஆகவே சிறந்த உணவுப் பழக்கத்தை பேணி ஆரோக்கியமாக வாழ்வோம்.

You May Also Like:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

உணவு கலப்படம் கட்டுரை