உணவு கலப்படம் கட்டுரை

unavu kalappadam katturai in tamil

தற்காலத்தில் அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் சில வர்த்தகர்கள் உணவுப் பொருட்களின் தரத்தை குறைக்கும் நோக்கில் அவற்றில் கலப்படங்களை மேற்கொள்கின்றனர். இது தற்காலத்தில் அதிகரித்த வரும் பாரிய பிரச்சினை ஆகும்.

உணவு கலப்படம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உணவு கலப்படத்தினால் ஏற்படும் விளைவுகள்
  • கலப்படம் செய்யப்படும் சில பொருட்கள்
  • உணவு கலப்பட தடைச் சட்டம்
  • பாதுகாப்பு வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக உணவு காணப்படுகிறது. நாம் உட்கொள்கின்ற உணவின் ஆரோக்கியத்தை பொறுத்தே எம் ஆயுள் நீடிக்கின்றது மற்றும் எம் அன்றாட செயல்பாடுகள் சரிவர நடக்கின்றது.

நாம் உண்ணும் உணவின் ஆரோக்கியமானது அந்த உணவின் தரத்தில் தான் தங்கியுள்ளது. இன்றைய காலத்தில் மனிதர்கள் அதிகளவில் நோய்வாய்ப்படுவதற்கான பிரதான காரணமாக உணவுப் பொருட்கள் தரமற்று காணப்படுவதே பிரதான காரணமாக காணப்படுகிறது.

உணவு கலப்படத்தினால் ஏற்படும் விளைவுகள்

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதன் மூலம் ஏற்படும் தீவிர பாதிப்புகள் நுகர்வோரை ஏமாற்றுவது மட்டுமல்ல. உணவு கலப்படம் செய்த பொருட்கள் பல்வேறு கேடுகள் மற்றும் வியாதிகள் வருவதற்கும் அடிப்படை காரணமாக அமைகின்றது.

கலப்படம் செய்யப்பட்ட உணவில் கற்களும், மணலும் இருக்குமாயின் அது பற்களையும் உடலின் குடல் பகுதியில் காணப்படும் மெல்லிய தசையையும் பாதிக்கிறது.

பாக்டீரியா மூலம் வியாதியை உண்டாக்கும் நுண்ணுயிரை சுமந்து வரும் டால்க் மற்றும் சுண்ணாம்பு பவுடர் எமது உடலால் ஜீரணிக்கப்படாமல் செரிமாண சக்தியை பாதிக்கிறது. தூய்மையற்ற நீரை ஒழுங்கற்ற முறையில் சுத்திகரிப்பதனால் பல வயிறு சம்மந்தப்பட்ட வியாதிகள் வர காரணமாகின்றது.

சில பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் காணப்படுவதற்காக இரசாயன பொருட்களை அவற்றில் கலப்பதனால் அவை புற்றுநோயையும் உண்டாக்குகின்றது.

கலப்படம் செய்யப்படும் சில பொருட்கள்

உணவு சமைக்க பயன்படுத்துகின்ற எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெயை கலத்தல். இந்த ஆர்ஜிமோன் எண்ணெய் நச்சுத்தன்மை நிரம்பியது, இது டிராப்ஸி எனும் நோய் ஏற்படுவதற்கு காரணமாகிறது.

பழங்களை பழுக்க வைப்பதற்கு கல்சியம் கார்பைட், எதிபான் மற்றும் ஆக்டோஸின் பயன்படுத்தப்படுகிறது. இது கேன்சர் போன்ற நோய்கள் உருவாக காரணமாகிறது.

கேசரி பருப்பில் சுவையை அதிகரிப்பதற்காக மாட்டின் கொழுப்பை பயன்படுத்துதல். இவ்வாறு மாட்டின் கொழுப்பை பயன்படுத்துகின்ற போது அவற்றை அசைவத்தை தவிர்ப்பவர்கள் அறியாது உட்கொள்கின்றனர். இவ்வாறு பல்வேறு உணவுப் பொருட்களுடன் பல்வேறு இரசாயனங்களை கலக்கின்றனர்.

உணவு கலப்பட தடைச் சட்டம்

உணவு கலப்படத்தை தடுக்க உணவு கலப்பட தடைச் சட்டம் 1954ல் ஏற்படுத்தப்பட்டது, கலப்படம் செய்த உணவு வகைகள் உடலுக்கு தீங்க விளைவிப்பதை உற்பத்தி செய்வது, விற்பது, தடை செய்யப்பட்ட பொருட்களை உணவு சேர்ப்பது போன்றவைகள் மீது சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இச்சட்டம் நீக்கப்பட்டு ஆகஸ்ட் 2011 முதல் ‘உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006’ அமுலுக்கு வந்து தற்போது வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற உணவு என்ற நிலையில் சட்டத்தின் கீழ் அபராதம், சிறை தண்டனை என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு வழிமுறைகள்

உணவை கையாளும்போது சில பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்துவது ஒவ்வொரு நுகர்வோரின் கடமையாக காணப்படுகிறது.

அந்த வகையில், சமையலறையையும் சமையல் சாதனங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தேவையான அளவு உஷ்ணத்தை பயன்படுத்தி உணவு சமைக்க வேண்டும், சமைத்த உணவை சரியான வெப்பத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

அதிக வர்ணமூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்த்தல் வேண்டும், பொதி செய்யப்பட்டுள்ள உணவு பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள சேர்மானங்களை அவதானித்து பொருட்களை கொள்வனவு செய்தல் வேண்டும், இயற்கை உற்பத்தி பொருட்களை பயன்படுத்துதல் வேண்டும்.

உணவு பாதுகாப்பு பெற்றது என நிச்சயம் தெரிந்தால் அது போன்ற உணவுப் பொருட்களை பிரித்து அவற்றின் மேல் அபாயம் என குறிப்பிட்டு தனிமைப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தெரியப்படுத்தவும் வேண்டும்.

முடிவுரை

உணவு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயம். எம்முடைய நிலைத்திருப்புக்கு ஆரோக்கியமான உணவு என்பது இன்றியமையாதது.

தற்காலத்தில் உணவு கலப்படம் என்பது அதிகரித்து நிலைகள் காணப்படுவதனால் நாம் வாங்கும் உணவு பொருட்களை கவனமாக ஆராய்ந்து வாங்குவதுடன் கலப்படம் செய்து வியாபாரம் செய்பவர்களை சட்டரீதியாக புகார் செய்து விழிப்புணர்வுடன் செயல்படுதல் வேண்டும்.

You May Also Like:

நடையின் பங்கு பயனும் கட்டுரை

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை