கல்வி என்பது இந்த உலகில் பெரிதாக மதிக்கப்படும் ஒன்று. “கல்வி ஒன்றே இந்த உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம்” என்பது நெல்சன் மண்டேலாவின் கருத்து ஆகும்.
இளமையில் கல்வி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கல்வி என்பது
- கல்வியின் சிறப்பு
- இளமையில் கல்வி கற்பதன் அவசியம்
- முடிவுரை
முன்னுரை
“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பது முன்னோர்களின் திருவாக்கு ஆகும். அதாவது இளமை காலத்தில் கற்கும் கல்வியானது பச்சை மரத்தில் ஆணி அடிப்பது போல மிக இலகுவாக பதியக்கூடியது ஆகும்.
இதனாலேயே இளமை காலத்திலேயே கல்வியை சரிவர பயில வேண்டும் என கூறுகின்றனர். கல்வி என்பது யாது, அதன் சிறப்பு, பயன்கள் என்பவற்றை பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.
கல்வி என்பது
கல்வி என்ற சொல்லானது கல் + வி என்று பிரிக்கப்படும். கல்வி என்ற பகுதி “வி” என்ற தொழிற்பெயர் விகுதியைப் பெற்று வந்தது. இதனை தூண்டுதல் என்று பொருள் கொள்ளலாம். மணற்கேணியானது தோண்டுவதற்கு தகுந்த நீர் அளிப்பதுபோல கல்வியானது படித்ததற்கு தகுந்த அறிவை அளிக்கிறது.
கல் என்ற சொல்லில் உள்ள “கல்” என்ற சொல்லானது “நீ படிப்பாயாக” என்று அறிவுறுத்துகிறது. படிப்பதனால் பயன் இன்னது என்று அது அறிவுறுத்துகின்றது.
கல்வியின் சிறப்பு
ஒரு மரத்துக்கு எப்படி அதன் வேர் முக்கியமோ அதுபோலத்தான் மனிதனுக்கு கல்வி இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய வாழ்க்கை முறையில் கல்வி என்பது ஓர் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது.
கல்வி கற்பதால் நாம் நம் வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்ல முடியும். கல்வி என்பது அழிவற்ற மற்றும் அளவற்ற செல்வமாகும். இச்செல்வம் கள்வர்களால் கவரப்பட இயலாத அரிய பொக்கிஷமாகும்.
கல்வியை பிறருக்கு கொடுக்க கொடுக்க அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறைவடையாது. நாம் இன்று கற்கும் கல்வி அறிவானது ஏழு பிறவிகளிலும் எம்மை வழிநடத்துகின்றது.
இளமையில் கல்வி கற்பதன் அவசியம்
“இளமையில் கல்”என்பது ஔவை பிராட்டியின் கருத்தாகும். இளமைப் பருவமே கல்வி கற்பதற்கு ஏற்ற பருவம் என கூறப்படுகிறது.
ஏனெனில் குழந்தை உள்ளம் சஞ்சலம் இல்லாதது, உல்லாசமான சுறுசுறு உடையது, மாசுபடியாதது, தன்பால் படித்ததை நன்கு பற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. ஆதலாலே இளமைப் பருவமானது கல்விக்கு வளமாய் அமையும் பருவம் என கூறப்படுகிறது.
இளமைப் பருவத்தில் கல்வி கற்பது என்பது பச்சை மரத்தில் ஆணி அரைவது போல் இலகுவில் பதியக்கூடியது. இளமைப் பருவத்தை கல்வியில் கழித்தவன் நல்ல அறிவாளியாய் உயர்ந்து வாழ்நாள் முழுவதும் தகுதியோடு வாழ்கின்றான்.
மனிதனின் உளவள ஆராய்ச்சியின் படி நோக்குகின்ற போது மனிதனுடைய மூளையானது அவனுடைய இளமைப் பருவத்திலேயே சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றது இதன் மூலம் புதிய புதிய விடயங்களை கற்று அறிந்து கொள்ளவும் முடிகின்றது எனக் கூறப்படுகிறது.
முடிவுரை
செல்வத்துள் சிறந்த செல்வம் கல்விச்செல்வம் ஆகும். கல்வி நம் வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றது. கல்வி கற்று வாழ்க்கையில் வளம் பெறலாம்.
அழியாத செல்வமாக காணப்படும் கல்வியை சரிவர பெற்று நாளைய சமுதாயத்தைகளாக நாம் ஒவ்வொருவரும் சிறந்த பிரஜையாக வாழ்வது மட்டுமல்லாது வருகின்ற சந்ததியினரும் சிறந்த முறையில் கல்வி பயில உதவுதல் வேண்டும்.
You May Also Like: