இருள் வேறு பெயர்கள்

இருள் வேறு சொல்

இருள் என்பது ஒளி இல்லாத கருமை நிறைந்த சூழல் ஆகும். பொதுவாக இருள் என்பது இயற்கையாக இரவு நேரங்களில் உண்டாகும் ஒளிர்மையற்ற நேரத்தை குறிப்பது ஆகும்.

அதேசமயம் இருள் என்பது செயற்கையாகவும் ஏற்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக ஒளி கிடைக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் பகல் நேரங்களிலும் இருளே சூழ்ந்திருக்கும்.

இருள் சூழ்ந்திருக்கும் நேரங்களில் எம்மால் கண்ணெதிரே இருப்பவற்றை தெளிவாக காணமுடியாது. இதனால் இருள் என்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இருள் வேறு பெயர்கள்

  • நிசி
  • அந்தகாரம்
  • அல்
  • கருமை
  • இருட்டு

“பலருக்கு வாழ்க்கை என்பது இருள் நிறைந்தாகவே காணப்படுகின்றது.” இங்கு இருள் என்பது துன்பம் என்று பொருள்படுகின்றது.

“இன்றும் சிலர் பகுத்தறிவை பயன்படுத்தாமல் இருளில் மூழ்கியிருக்கின்றார்கள்” இங்கு இருள் என்பது அறியாமை என்று பொருள்படுகின்றது.

You May Also Like:

முடிவு வேறு சொல்

நவமி என்றால் என்ன