நாம் வாழும் உலகில் இயற்கையானது எமக்கு பல்வேறு வகையிலும் உதவியாக காணப்படுகின்ற போதிலும் அதன் கோரமான முகம் ஒன்றும் உள்ளது. அதனையே இந்த இயற்கை பேரிடர்கள் எமக்கு உணர்த்துகின்றன.
இந்த இயற்கை பேரிடர்கள் இயற்கையாகவே பெரும்பாலும் நடைபெற்றாலும் சில சமயங்களில் மனிதர்களுடைய செயற்பாடுகளும் காரணமாக அமைந்து விடுகின்றன.
இயற்கை பேரிடர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இயற்கைப் பேரிடர்கள் என்றால் என்ன
- இயற்கை பேரிடர்களினால் ஏற்படும் பாதிப்புகள்
- இந்திய பிரதேசம் கண்ட இயற்கை பேரிடர்கள்
- இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன் ஆயத்தங்கள்
- முடிவுரை
முன்னுரை
“அழகு ஆபத்தானது” என்ற வாசகத்துக்கு இணங்க இயற்கை என்பது கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்ப்போர் அனைவருக்கும் அழகாக காட்சியளிப்பவையாகும்.
இந்த அழகு சில சமயங்களில் சீற்றம் கொண்டு பெரிய பேரிடர்களை ஏற்படுத்தி மனிதர்களுடைய உயிர்களையும், உடைமைகளையும், உறவுகளையும், சொத்து, செல்வங்களையும் பறித்துச் செல்வதனை காண முடிகின்றது.
இயற்கை பேரிடர்கள் என்றால் என்ன
நாம் வாழும் உலகானது இதுவரை காலமும் பல்வேறு வகையான இயற்கை பேரிடர்களை சந்தித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் சுனாமி, மண் சரிவு, வறட்சி, வெள்ளப்பெருக்கு, இடி மின்னல், பனிச்சரிவு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, புயல் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை குறிப்பிடலாம்.
இவ்வாறான இயற்கை உணர்த்தங்களே இயற்கை பேரிடர்கள் எனப்படுகின்றன. இருந்தாலும் ஒரு சில பேரிடர்கள் மனிதர்களின் செயல்களால் ஏற்படுவதாகவும் காணப்படுகின்றன.
அதாவது நகரங்களை உருவாக்கும் மனிதர்களின் திட்டங்களாளும், நடவடிக்கைகளாளும் விளைவிக்கப்பட்டு அதன் விளைவாக நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவதை குறிப்பிடலாம்.
இயற்கை பேரிடர்களினால் ஏற்படும் பாதிப்புகள்
நாம் வாழும் இந்த உலகில் பல்வேறு ஜீவராசிகள் அதாவது பறவைகள் விலங்குகள் தாவரங்கள் போன்ற பல உயிர்கள் வாழுகின்றன.
எனவே இந்த இயற்கை சீற்றம் கொண்டு பேரிடர்களை ஏற்படுத்தும் போது அதனால் மனிதன் மட்டும் இன்றி இந்த அனைத்து ஜீவராசிகளும் பாதிப்படைவதனை காணலாம்.
அத்தோடு இந்த இயற்கை பேரிடர்களினால் மனிதனின் உயிர், அன்றாட வாழ்க்கை, சுகாதாரம், சமுதாயம், பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் போன்றனவும் பாதிக்கப்படுகின்றன.
இந்த இயற்கை பேரிடர்களின் விளைவுகளால் தன்னுடைய சொத்து, உடைமைகள் போன்றவற்றை இழந்து பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமைகள் காணப்படுகின்றன.
இந்திய பிரதேசம் கண்ட இயற்கை பேரிடர்கள்
உலகில் பல்வேறு பேரிடர்கள் நிகழ்ந்தது போலவே இந்திய பிரதேசத்திலும் பல்வேறு பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன அவற்றிலும் அதிகமான சேதங்களை உண்டாக்கி வரலாற்றில் பதியப்பட்ட பேரிடர்கள் சிலவற்றை நோக்குவோம்.
1737இல் கல்கத்தாவில் நிகழ்ந்த பெரும் புயல் அர்த்தத்தினால் 300 000 மக்கள் பலியானமை, 1839இல் இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் நிகழ்ந்த புயலால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தமை,
2004 இல் இந்துசமுத்திர பிரார்த்தியத்தை தாக்கிய சுனாமியானது 227 898 மக்களை பலியாக்கியதோடு பலரின் வாழ்விடங்களையும்,உடமைகளையும் அழித்தது.
இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னாயுத்தங்கள்
இந்த இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் அவை மனிதர்களுடைய உயிர், உடமை, சொத்து போன்ற அனைத்தையும் கேள்விக்குறியாக மாற்றி விடுவதனால் நாம் இந்த இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளுதல் வேண்டும்.
மேலும் இயற்கை பேரிடர்களை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள வானிலை, காலநிலை அவதானிப்பு, அனர்த்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களுக்கு ஊடகங்களின் மூலமாக செய்திகளையும், தகவல்களையும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இன்னும் சாதாரண பொது மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அனைவருக்கும் இந்த இயற்கை பேரிடர்கள் சம்பந்தமான தெளிவான அறிவினையும் தெளிவினையும் வழங்குவது அவசியமாகும்.
முடிவுரை
இயற்கை மனித வாழ்க்கையோடு இணைந்து ஒன்றாகும். இருந்த போதும் இந்த இயற்கை சீற்றமடைந்து ஏற்படுத்தும் பேரிடர்களை மனிதனால் தடுத்து நிறுத்த முடியாது ஆனால் அவனுடைய அறிவும் தொழில்நுட்பமும் எவ்வளவு பேரிடர்கள் வந்தாலும் அவற்றோடு போராடி மீண்டும் அவனை தகவமைத்துக் கொள்வதற்கு உறுதுணையாகவே உள்ளது.
ஆகவே நாம் அனைவரும் இந்த இயற்கை பேரிடர்கள் சம்பந்தமான அறிவினைப் பெற்றிருப்பதோடு, அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயுத்தங்கள் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும்.
You May Also Like: