இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகேல் ரத்னா விருது

கேல் ரத்னா விருது

இந்திய குடியரசில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது கேல் ரத்னா விருது ஆகும். இது அதிகார பூர்வமாக மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படுகின்றது.

1991- 1992 இந்த விருது முதன்முதலில் நிறுவப்பட்டது. இந்த விருதுக்கு விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் உயர்ந்த அங்கீகாரம் இருந்தது. இந்த விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான விருது மட்டுமல்லாது மிகச் சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி ஞாபகார்த்தமாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது எனும் பெயரில் வழங்கப்பட்டு வந்தது. நரேந்திர மோடி அரசாட்சி செய்த காலத்தில் 2021ம் ஆண்டு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கேல் ரத்னா என்பது ஹிந்தி மொழியில் விளையாட்டில் ரத்தினக்கல் போன்றவர் எனப் பொருள்படும். இந்த விருதில் அங்கீகார சுருள், பதக்கம், பண முடிப்பு போன்றவை உள்ளடங்கியிருக்கும். 2004 வரை 500,000 ஆக இருந்த பண மதிப்பு அதன் பின்னர் 750,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

விருதுக்காக தேர்வு செய்யப்படும் முறை

தேர்வுக் குழுவானது நடுவண் அரசினது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விளையாட்டுத்துறை வல்லுனர்களால் அமைக்கப்படுகிறது. இந்த விருதுக்கான சாதனையாளர்கள் பட்டியல் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31 வரையிலான காலத்தில் சாதனை புரிந்தவர்களை சாதனைப் பட்டியலில் இணைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தெரிவு செய்யப்படுகின்றது.

இந்த சாதனைப் பட்டியலில் இணைவதற்கு சாதனையாளர்கள் ஆசிய விளையாட்டுக்கள், ஒலிம்பிக் விளையாட்டுக்கள், உலக சாம்பியன்ஷிப் அல்லது உலக கோப்பை போட்டிகளில் கட்டாயமாக குழுவாகவோ தனி நபராகவோ பங்குபற்றி இருத்தல் வேண்டும்.

இந்த விருதை ஒருவர் தம் வாழ்நாளில் ஒரு முறையே பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் மாநில அரசு, நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் போன்ற ஏதாவது ஒரு அமைப்பினால் தேர்வுக்குரிய நபர்கள் பரிந்துரை செய்யப்படுதல் கட்டாயமாகும்.

குடியரசின் பல தரப்பட்ட ஆய்வுகளின் பின்னரே தேர்வு நபர் தெரிவு செய்யப்படுவார். தெரிவு செய்யப்படும் சாதனை வீரர்களுக்கு குடியரசுத் தலைவரே விருது வழங்குவார்.

பெரும்பாலான சமயங்களில் ஒரு வருடத்தில் ஒரு நபருக்கே விருது வழங்கப்படும். சில வேளைகளில் விளையாட்டு வீரர்கள் வேண்டிய தகுதிகளைப் பெறவில்லையாயின் அந்த வருடம் எவருக்கும் விருது வழங்கப்பட மாட்டாது.

விருது வழங்கப்பட்ட பட்டியல்

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை முதன்முதலில் 1991 – 1992 இல் சதுரங்க விளையாட்டிற்காக விசுவநாதன் ஆனந்த் பெற்றுக் கொண்டார்.

இது வரையில் பில்லியடு, பாய்மரப் படகோட்டம், பளு தூக்குதல், டென்னிசு, கிரிக்கெட்,  தடகள விளையாட்டு, ஹாக்கி, இறகுப் பந்தாட்டம், சுடுதல், சுனூக்கர், மல் யுத்தம், ஜிம்னாஸ்டிக், மற்போர், ஈட்டி எறிதல், பாரம் தூக்குதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், குறி பார்த்து சுடுதல், மேசைப்பந்தாட்டம், போன்ற விளையாட்டுக்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளன.

You May Also Like:

யோகா என்றால் என்ன

ஐம்பொன் என்றால் என்ன