இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது | கச்சு மாவட்டம் |
கச்சு மாவட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் கச்சு மாவட்டம் ஆகும். கச்சு மாவட்டம் மேற்கிந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கச்சு வளைகுடாவில் அமைந்துள்ளது.
கச்சு மாவட்டத்தின் தலைநகரம் புஜ் நகரம் ஆகும். இந்த மாவட்டத்தின் பரப்பளவு 45,652 சதுர கி.மீ ஆகும். ஆறு சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் அமைந்துள்ளமை கச்சு மாவட்டத்தின் சிறப்பிற்குரிய அம்சம் ஆகும்.
கச்சு மாவட்டம் பெரும்பாலான சதுப்பு நிலங்களாலும் வறண்ட நிலங்களாலும் சூழ அமையப் பெற்றுள்ளது. இந்த கச்சு மாவட்டம் ராண் ஆப் கட்ச், உப்பு பாலைவனம், சாத்தான்களின் ஓவியம் போன்ற பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
இந்தியாவையும் பாகிஸ்தானையும் கச்சு வளைகுடாவில் அமைந்துள்ள கோரி கீரிக்கடல் எல்லைக்கோடு பிரிக்கின்றது.
கச்சு மாவட்டமானது அரபுக் கடலால் தெற்கில் இருந்தும் கச்சு வளைகுடாவால் மேற்கு திசையிலும் ராண் ஆப் கட்ச் சதுப்பு நிலப் பகுதிகளால் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் எல்லைகளாக சூழப்பட்டுள்ளன. கச்சு மாவட்டத்தில் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.
கச்சு மாவட்டத்தின் புவியியல் அமைப்பு
புஜ், காந்திதாம்,ராபார், நகாரத்தின, அன்ஜார், மாண்டவி, மாதாபர், முந்திரா, பாச்சு போன்றன கச்சு மாவட்டத்தின் முக்கியமான நகரங்கள் ஆகும்.
கச்சு மாவட்டத்தில் 969 கிராமங்கள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் 1458m உயரமான கள தொங்கர் எனப்படுகின்ற கறுப்புல மலையும் கச்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கச்சு மாவட்டத்தில் கடந்த 187 வருடங்களில் 90 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கச்சு மாவட்டமானது நில நடுக்கோட்டில் அமைந்துள்ள காரணத்தினாலேயே இங்கு அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது.
2001 ஆம் ஆண்டு புஜ் நகரில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பல இடங்கள் தரைமட்டமானதோடு பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
கச்சு மாவட்டத்தில் 97 சிற்றாறுகள் ஓடுகின்றன. இங்குள்ள பல ஆறுகள் ராண் ஆப் கச் எனப்படுகின்ற சதுப்பு நிலப் பகுதியைச் சுற்றி ஓடுகின்றன. அத்துடன் மேலும் சில ஆறுகள் அரபுக் கடலுடன் கலக்கின்றன. கச்சு மாவட்டத்தில் 22 பேரணைகள் காணப்படுவதோடு நூற்றுக் கணக்கான சிற்றணைகளும் காணப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் கச்சு மாவட்டத்தில் இந்திய காட்டு கழுதை சரணாலயம், கச்சு பாலைவன விலங்குகள் காப்பகம், கச்சு பஸ்தர் வன விலங்குகள் காப்பகம், பன்னி புல்வெளி காப்புக் காடுகள், சாரி தந்து சதுப்பு நில காப்புக் காடுகள் ஆகிய வனவிலங்குகள் சரணாலயங்கள் மற்றும் காப்புக் காடுகள் அமைந்துள்ளன.
நாகரிகம் மற்றும் கலாசார அம்சங்கள்
இங்கு பேசப்படும் மொழி கச்சு மொழி ஆகும். கச்சு மொழியில் சிந்தி, குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றன. கச்சு மாவட்ட மக்கள் குஜராத்தி எழுத்து முறைமையே நடைமுறையில் பயன்படுத்துகின்றனர்.
கச்சு மாவட்டத்தில் நாடோடி இன மக்கள், கால்நடைத் தொழில் செய்யும் மக்கள்,மற்றும் கைவினைக் கலைஞர்கள் போன்றோர் இங்கு வசிக்கின்றனர்.
பொருளாதாரம்
இங்குள்ள கண்ட்லா, முந்திரா போன்ற துறைமுகங்கள் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதன் மூலம் இங்குள்ள மக்களின் தொழில், வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
கண்டலா துறைமுகம் வட இந்தியாவின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. அத்துடன் இங்கு மரத் தொழிற்சாலைகள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும் பல உப்பு உற்பத்தி செய்யப்படும் பல உப்பளங்கள் காணப்படுகின்றன.
கச்சு மாவட்டத்தில் இந்து சமயத்தினர், இஸ்லாமியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் போன்ற சமயத்தைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். கச்சு மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும்பான்மையான மக்கள் இந்துக்களாக இருப்பதால் அவர்கள் சைவ உணவுகளையே அதிகமாக உட்கொள்கின்றனர்.
You May Also Like: