ஆண்ட்ராய்டு அரக்கன் கட்டுரை

android arakkan katturai in tamil

நம் வாழ்வின் அடிப்படை அங்கமாகி இருக்கும் ஸ்மார்ட்  போன்களில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டு(Android) தொழில்நுட்பத்தில் தான் உருவாக்கப்படுகின்றன.

ஆண்ட்ராய்டு அரக்கன் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வரலாறு
  3. BUGDROID
  4. பதிப்பு
  5. ஆண்ட்ராய்டு அரக்கன் என அழைக்கப்படக் காரணம்
  6. முடிவுரை

முன்னுரை

தற்காலத்தில் தொலைபேசி என்பது எம்மவர்கள் அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒரு சாதனமாக அமைந்து காணப்படுகிறது. அதிலும் இளைஞர்கள் மத்தியில் தொடுதிரை தொலைபேசி மிகவும் பிரசித்தமான ஒன்றாக காணப்படுகிறது.

பல நன்மைகளையும், தீமைகளையும் செய்கின்ற தொடுதிரை தொலைபேசியை இயக்குகின்ற இயக்கத்தளமாக காணப்படுகின்ற ஆன்ட்ராய்டானது google என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்படுகிறது.

இந்த ஆண்ட்ராய்டு பல மக்களால் அரக்கன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு அரக்கன் பற்றியும், இவ்வாறு இது அழைக்கப்படுவதற்கான காரணம் பற்றியும் நோக்குவோம்

வரலாறு

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பமானது 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி ஆண்ட்ராய்டு இயக்குதளத்தின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

முதன்மையாக தொடுதிரையுடன் கூடிய செல்லிடப்பேசிக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கத்தளம்தான் ஆண்ட்ராய்டு இயக்கத்தளம் ஆகும்.

ஆண்ட்ராய்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த செல்லிடப்பேசிகள் பிறகு கூகுள் (Google) நிறுவனத்தினால் வாங்கப்பட்டு, அவற்றின் மூலம் முதன் முதலில் HTCயின் G1 ஸ்மார்ட் போனில் அறிமுகம் செய்யப்பட்டது.

பின்னர் தொடுதிரையின் தொலைநுட்பம் வளர்ச்சி பெறவே MOTOROLA, SAMSUNG ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்களில் ஆண்ட்ராய்டு இயக்கத்தளம் பயன்படுத்தப்பட்டது. தற்போது Open Handset Alliance (OHA) இன்று நிறுவனத்தினாலும் உருவாக்கப்படுகிறது.

BUGDROID

2010 ஆம் ஆண்டு முதல் பிரபலமான இயக்கத்தளமாக மாறியது. பின்னர் 10 ஆண்டுகளில் ஆண்ட்ராய்டு மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. உலகில் பயன்பாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 88 சதவீதமானவை ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டு இயக்குதளத்திலே உருவாகியது. ஆண்ட்ராய்டை குறிப்பிடும் பச்சை நிற பொம்மை BUGDROID என அழைக்கப்படுகிறது.

மேலும் அனைத்து ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கும் இனிப்பு உணவுகளை அடிப்படையாகக் கொண்ட பெயர்களே சூட்டப்படுகின்றன. உதாரணமாக ஆண்ட்ராய்டு HONEYCOMB 3.0 என்ற பதிப்பின் மூலம் டேப்களிலும் ஆண்ட்ராய்டு இயக்கத்தளம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

பதிப்பு

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பமானது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பதிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தின் பதிப்புகளாக Tiramisu(OS 13), Snow cone (OS 12), Red Velvet Cake (OS 11), Quince Tart (OS 10), Pie (9.0), Oreo (8.0), Nougat (7.0), Marshmallow (6.0) என்பவை காணப்படுகின்றன.

ஆண்ட்ராய்டு அரக்கன் என அழைக்கப்படக் காரணம்

ஆண்ட்ராய்டு தொலைபேசி இயக்குத்தளமானது பல மக்களால் ஆண்ட்ராய்டு அரக்கன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளமே முதன் முதலில் தொடுதிரை தொலைபேசியை அறிமுகம் செய்தது.

இதன் காரணமாக கல்வி கற்கும் மாணவர்கள் தொடக்கம் இளைஞர்கள் அனைவரும் அதில் மூழ்கி அதனையே தம்முடைய வாழ்வாக எண்ணி சுற்றுச்சூழலில் நடப்பவற்றை கண்டிராது, இந்தத் தொலைபேசியில் மூழ்கிக் காணப்படுகின்றனர்.

இதில் காணப்படும் play store இல் எத்தனை விளையாட்டுகளையும் (Games), பதிவிறக்கி கொள்ளலாம். இதன் மூலம் அதிகப்படியானோர் இதற்கு அடிமையாகி உள்ளனர்.

முடிவுரை

எந்த ஒரு தொலைத்தொடர்பு சாதனங்களிலும் நன்மையான விடயங்களும், தீமையான விடயங்களும் காணப்படுகின்றன.

ஆண்ட்ராய்டு இயக்கத்தலமானது அதிகப்படியான விஷயத்தை தன்மைகளை வழங்குவதன் நோக்கம் எம்முடைய நேரத்தையும், சேவைகளையும் விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே என்பதை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்துவது எம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

You May Also Like:

அறிவியல் அழிவு கட்டுரை

திரைப்படங்களின் நன்மை தீமைகள் கட்டுரை