“ஒரு தேசம் ஊழல் இல்லாமலும் அறிவின் தேசமாகவும் இருக்க தாய், தந்தை, குரு ஆகிய மூன்று பேரால் மட்டுமே முடியும்” என்றார் அப்துல் கலாம். அதற்கிணங்க மூன்றாம் நிலையில் உள்ள ஆசிரியர் என்பவர் சிறப்பானவர். உலகில் எத்தனையோ கிடைக்கப் பெறாத சிறப்பு ஆசிரியர் தொழிலுக்கு உண்டு.
ஆசிரியர் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆசிரியர் என்றால் யார்
- ஆசிரியரின் சிறப்பு
- ஆசிரியர் ஏன் அவசியம்
- ஆசிரியரின் தகுதி
- உலக ஆசிரியர் தினம்
- ஆசிரியர் எதிர்கொள்ளும் சவால்கள்
- முடிவுரை
முன்னுரை
ஒரு மாணவனை நல்வழிப்படுத்த ஆசிரியர் என்பவர் அவசியம். ஒருவன் எவ்வளவு விடயங்களை கற்றாலும் அதனை ஒழுங்குபடுத்த ஆசிரியர் தேவை என்ற வகையில் ஆசிரியரின் சிறப்பு என்றும் போற்றத்தக்கது.
ஆசிரியர் என்றால் யார்
“ஆசிரியர் கற்பிப்பவர் அல்ல யாரிடம் இருந்து அவர்கள் கற்கின்றாரோ அவர்களே ஆசிரியர் “ என்பதற்கு இணங்க ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக கல்வியை போதிப்பவராக விளங்குகின்றார்.
பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக வளர்வது அன்னை வளர்ப்பினிலே என்று கூறப்பட்டாலும் அவர்களை உலகில் மிளிரச் செய்வது ஆசான்களே. ஆசிரியர் என்பவர் ஒட்டுமொத்த உலக அறிவினை ஒரே இடத்தில் மாணவர்களைக்கு கொடுப்பவர் ஆவார்.
ஆசிரியரின் சிறப்பு
கல்வியை மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து அனுபவங்களையும் கற்றுத் தருபவரே ஆசிரியர். அவ்வகையில் ஒவ்வொரு விடயங்களை கற்பிக்கும் ஆசிரியர் எப்போது சிறப்பு மிக்கவர்.
இவர்களின் சிறப்பானது சிலையில் எழுத்து போல மாறாதது. இவர்கள் மாணவர்களுக்கு உலகப்படிப்பையும் நல்ல பண்பையும் கற்றுத்தருப்பவர். சமூகத்தை எதிர்கொள்ளும் தைரியத்தை கொடுப்பவர். மற்றும் தவறான விடயங்களை செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் சக்தி ஆசான்களுக்கே உண்டு.
“எழுத்தறிவித்தவன் இறைவன்” ஆனால் அதனை கற்பிப்பவர் ஆசான். அதனாலயே மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கு முதல் படியாக ஆசிரியர் போற்றப்படுகின்றார் ஆசிரியர் என்போர் ஒவ்வொரு மாணவருக்கும் கிடைத்த தோழன். ஆசிரியரே மாணவர் உயர ஏணியாக இருக்கின்றார்.
அழியாச் செல்வம் கல்வியை போதிக்கும் சிறப்புடையவர் ஆசான்களே. கல்வியை கொடையாக தரும் ஆசான்கள் என்றும் உயரத்தில் இருக்க வேண்டியவர்களே.
அவர்களின் சிறப்பு கருதியே மாவீரர் அலெக்சாண்டர் “நான் உயிரோடு இருக்கும் என் தந்தைக்கு கடன் ஆனால் என் வாழ் நாள் முழுவதும் ஆசிரியர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
ஆசிரியர் ஏன் அவசியம்
ஒரு நல்ல குழந்தை பிறந்து பள்ளிக்கு செல்லும் வரை அவன் தாயின் அரவணைப்பில் வளர்கின்றான். பின் அவனை ஊர் அறிய மகானாக்க ஆசிரியர் தேவை. நல்ல ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம் என்பவற்றை கொடுக்க ஆசிரியர் தேவை.
சைவ சமயம் அஞ்ஞானம் போக்க குரு ஒருவர் தேவை என்கிறது அதாவது அறியாமை எனும் இருளை நீக்கி எம் அறிவை விளக்க ஆசான் ஒருவர் தேவை. இவ்வாறு வாழ்வில் பல விடயங்களுக்கு ஆசான் அவசியம் தேவை.
ஆசிரியரின் தகுதி
பூகோலமயமான இவ்வுலகில் ஒரு மாணவனை தலை சிறந்த மாணவனாக்க ஆசிரியர் பங்கு முக்கியமானது.
இவர்கள் மாணவர்களுக்கும் தமக்கும் இடையே நல்ல தொடர்பாடலை மேற்கொள்பவராகவும், மாணவரின் திறன்களின் அடிப்படையில் அவர்களை மதிப்பீடு செய்பவராகவும், மாணவர் நலனில் அக்கறை காட்டுபவராகவும், நேர்மையான எண்ணங்களை மாணவர்கள் மனதில் ஊட்டுபவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறான தகுதிகள் கொண்டவராக ஆசிரியரியர்கள் காணப்பட வேண்டும்.
உலக ஆசிரியர் தினம்
இவ்வாறு மாணவர்களின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் ஆசான்களைப் போற்றவே ஒக்டோபர் 5 உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆசிரியர்களை புகழ்ந்து சுவரொட்டிகள், மடல்கள், பரிசுப் பொருட்கள் போன்றன மாணவர்களால் வழங்கப்படுகின்றன.
இன்றும் ஆசிரியர் தினமானது ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக பல்வேறு நாடுகளில் பலவாறாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இந்தியாவில் 1962 தொடக்கம் ஒக்டோபர் 5 ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் எதிர்கொள்ளும் சவால்கள்
ஆசிரியர்கள் தான் கற்பிக்கும் சூழல் தொடக்கம் மாணவர்களை வழிநடத்துவது வரை பல சவால்களை சந்திக்கின்றனர். தொழில்நுட்ப பாவனை அதிகம் காணப்படுவதால் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான தொடர்பு குறைவாக உள்ளது இதனால் மாணவர்களை கண்டறிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
மேலும் மாணவர்கள் மீள் திறன் மிக்கவர் மீள்திறன் குறைந்தவர் என இருவரும் ஒரே வகுப்பறையில் காணப்படுவதனால் கற்பிப்பது கடினமாக அமைகின்றது.
தற்கால குழந்தைகள் குறும்புத்தனம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர் அவர்களுக்கு கற்பிப்பதும் வழிநடத்துவதும் கடினமாக உள்ளது. இவ்வாறான சவால்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
முடிவுரை
“குரு தேவோ பவ” என்ற உபநிடத வாக்கியத்திற்கு இணங்க ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள். தேசத்தின் வளமான எதிர்காலத்தை தாங்க இருக்கும் தூண்களுக்கு ஒளி கொடுப்பவர்கள். ஒரு மாணவனை சான்றோர் ஆக்கும் ஆசிரியர்கள் என்றும் போற்றத்தக்கவர்.
You May Also Like: