நம்மில் பலருக்கும் ஜோதிட ரீதியான நம்பிக்கைகள் பல காணப்படுகின்றன. ஆனால் சிலர் அவற்றை மூட நம்பிக்கை என்று கூறினாலும் ஆன்மீக ரீதியான ஜோதிட சாஸ்திர பல விடயங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை என ஆய்வு வழியாக நிறுவப்பட்டுள்ளன.
ஜோதிடத்தில் வளர்பிறை, தேய்பிறை என இருவகைப்பட்ட பிறைகளில் பல திதிகள் காணப்படுகின்றன. அவற்றுள் அஷ்டமி திதியும் ஒரு திதி ஆகும். இன்றைய பதிவில் நாம் அஷ்டமி திதியில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என்பன பற்றி பார்ப்போம்.
நமது முன்னோர்களிடம் இருந்து இன்று வரையுள்ள பலரிடம் அஷ்டமி திதியில் தொட்டது எதுவும் துலங்காது என்ற வழக்கத்தை கைக்கொண்டு வருகின்றனர். இந்த திதியானது சுப காரியங்கள் தொடங்குவதற்கு மட்டுமே உகந்த திதி அல்ல.
ஆனால் இறைவழிபாடுகள் தொடக்கம் தெய்வீக காரியங்கள் நிறைவேற்ற சுப நாளாக கருதப்படுகின்றது. அதாவது நாம் வணங்கும் தெய்வங்களுள் ஒன்றான கிருஸ்ணர் பிறந்தது அஷ்டமி திதியில் ஆகும். ஆனால் சில முக்கியமான சுப காரியங்களைத் தவிர்ப்பது சிறந்தது.
அஷ்டமி அன்று செய்ய கூடாதவை
பண்டைக் காலம் முதல் இன்று வரை உள்ள இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அஷ்டமி திதியில் ஆரம்பிக்கும் செயல்கள் முழுமை அடையாது பலனைக் குறைக்கும்.
அஷ்டமி திதியில் குடும்பம் சார்ந்த சுப நிகழ்வுகளான திருமணம், கிரகப்பிரவேசம் , நிச்சயதார்த்தம், தொழில் ஆரம்பம், காது குத்துதல் போன்ற நல்ல நிகழ்வுகளை ஆரம்பிக்க கூடாது. குறிப்பாக ஒரு மாதத்தில் இரண்டு அஷ்டமி திதிகள் வரும். இந்த திதிகளை நம்முடைய இந்துக்கள் சுபவிலக்கு திதிகளாக பின்பற்றி வருகின்றனர்.
அதாவது அஷ்டமி திதிகளில் தொடங்கும் காரியங்கள் முழுமை பெறாது நீட்சி அடைந்து கொண்டே செல்லும் என்பது ஐதீக நம்பிக்கை ஆகும்.
இந்த அஷ்டமி திதியானது இறைவன் அநீதிக்கு எதிராக அழித்தல் தொழிலை புரிவதற்காக அவதரித்த திதியாக காணப்படுகின்றது. அதாவது கிருஸ்ணர் பகவான் கம்சன் எனும் அரக்கனை அழிப்பதற்காக அஷ்டமி திதியில் அவதரித்த தினமாக காணப்படுகின்றது.
அஷ்டமியில் செய்யக் கூடியவை
ஒரு மாதத்தில் வரக்கூடிய இரண்டு அஷ்டமி திதிகளில் சுப காரியங்களை மட்டுமே செய்யக் கூடாதே தவிர இறை வழிபாடுகளை ஆற்ற முடியும். அதிலும் குறிப்பாக காலபைரவரை வணங்குதல் எல்லோருக்கும் பல வழிகளிலும் ஆன்மீக ரீதியாக நன்மைகளை நமக்கு தருகின்றன.
எல்லோருடைய வாழ்க்கையிலுமு பல கஸ்டங்கள், துன்பங்கள், தடைகள் என்பன ஏற்படுகின்றன. இவ்வாறு மனம் சோர்வடையும் வேளைகளில் எல்லாம் ஆலயங்களிற்கு சென்று இறை வழிபாடுகளை மேற்கொள்ளுதல் நன்று.
ஆலயங்களில் ஒரு விதமான நேர்மறையான கதிர்வீச்சுக்கள் உருவாகின்றன. இவை மனப்பதற்றம், மனச்சோர்வு, நிம்மதியின்மை போன்றனவற்றில் இருந்து நம்மை விடுவிக்க உதவுகின்றன.
குறிப்பாக அஷ்டமி திதியானது மூல மூர்த்தியான உருத்திர மூர்த்தி அவதரித்த நாளாகும். இந்த திதியில் உருத்திர மூர்த்தியை வணங்குதல் உச்ச பலனை நமக்கு அளிக்கும்.
எந்த ஒரு அபசகுண திதியையும் இறை வழிபாட்டின் மூலம் நலம் மிகுந்த நாளாக மாற்ற முடியும். இறை வழிபாடு தவிர மன வலிமைக்கு தியானம், யோகா போன்றவற்றையும் மேற்கொள்ளுதல் சிறந்தது.
You May Also Like: