“கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்” என்ற தாரக மந்திரத்தை வெறும் வார்த்தைகளாக மட்டுமல்லாமல், தனது வாழ்க்கை நெறியாக கண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர் அம்பேத்கர் ஆவார்.
அம்பேத்கர் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப வாழ்க்கை
- பெயர்க்காரணம்
- பணிகள்
- முடிவுரை
முன்னுரை
தாழ்த்தப்பட்ட மற்றும் அடிமட்ட மக்களுக்காக குரல் கொடுத்து இந்தியாவில் சாதி முறைமையினை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ நினைத்த மகானாக அம்பேத்கர் அவர்கள் காணப்படுகின்றார். “தீண்டாமை” எனும் கொடிய நோய் ஒழிய பாடுபட்ட தலைவராவார்.
ஆரம்ப வாழ்க்கை
அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள “மாவ்” என்னும் இடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும் மற்றும் பீமாபாய் என்கின்ற தம்பதியினருக்கும் 14 வது மகனாக ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 1891 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவர்கள் குடும்பம் மராத்திய வர்க்கத்தை சேர்ந்த குடும்பமாகும். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ” பீமாராவ் ராம்ஜி” என்பது ஆகும். இவர் “மஹர்” என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்.
இவர் தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்தவர் என்பதனால் சிறுவயது முதலே பள்ளிகளில் இவர் சந்தித்த இன்னல்கள் அதிகம்.
அவையாவன, இவர் பள்ளியில் மற்ற குழந்தைகளோடு அமரக்கூடாது, அவர்களோடு பேசக்கூடாது, விளையாட கூடாது. அது மட்டுமின்றி நீர் அருந்தினால் கூட அவர்களுக்கென்று தனியாக வைக்கப்பட்டுள்ள பானையில் இருந்துதான் நீரை எடுத்து அருந்த வேண்டும் என பல இன்னல்களையும் கடந்து தனது கல்வி வேட்கைக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு நமது ஆரம்பக் கல்வியை முடித்தார்.
பிறகு இவரது தந்தை பணியின் இடமாற்றம் காரணமாக இவர்களது குடும்பம் மும்பை நகருக்கு குடிப்பெயர்ந்தது. பின்னர் அவர் மும்பையில் தனது உயர்கல்வியை சிறப்புற கற்றார்.
கல்விகளில் சிறப்பு பெற்று விளங்கிய அம்பேத்கர் அவர்களுக்கு அப்போதைய பரோடா மன்னரின் கல்வி உதவி மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரம் பிரிவில் இளங்கலை படிப்பு படித்தார்.
அங்கும் அவரை சாதிப் பிரச்சனை தொடர்ந்து ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் கடின முயற்சி செய்து, அங்குருந்த ஒரு நல்ல ஆசிரியரின் உதவியுடன் ஒரு இளம் கலை பட்டத்துறை பெற்றார்.
பின்ன பரடோ மன்னரின் அழைப்புக்கு இணங்கி அவரது அரண்மனையில் படைத்தலைவராக பணியாற்றினார்.
அங்கும் பல சாதி கொடுமைகளை அனுபவித்தார். அவை யாவற்றையும் அறிந்து கொண்ட பரோடா மன்னர் அவரை வெளிநாடு அனுப்பி அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் போன்றவற்றில் முதுகலை பட்டம் பெறச் செய்தார்.
பெயர்க்காரணம்
இவர் பள்ளிகளில் தொடர்ந்த பல அவமானங்களை அனுபவித்து வந்த காலப்பகுதிகளில் எமகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவரின் மீது மிகுந்த அன்பு காட்டி வந்தார்.
அந்த அன்பின் அடையாளமாக தனது “பீமாராவ் ராம்ஜி” என்ற பெயருக்கு பின்னால் தன்னுடைய குருவின் பெயரான அம்பேத்கர் என்பதை நினைவாக மற்றும் அவருக்கு அளிக்கும் மரியாதையாக தனது பெயருக்கு பின் சேர்த்துக் கொண்டார். அன்று முதல் இவர் “பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்று அழைக்கப்பட்டார்.
பணிகள்
அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல அடக்க முறைகளுக்கு எதிராக சட்டத்தின் ரீதியாக பல போராட்டங்களை மேற்கொண்டு அவற்றில் வெற்றியும் கண்டார். பிரிவினைகளையும், வேற்றுமைகளையும் தூண்டிய பல அரசியல் தலைவர்களை இவர் கடுமையாக எதிர்த்தார்.
கல்வி எனும் ஆயுதத்தை அனைவரும் கையில் எடுக்க நாடு தானாக முன்னேறும் என வலியுறுத்தி விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தினார். பெண்கள் உரிமைகள் தொடர்பான சட்டம் சுரங்க தொழிலில் பெண்களை ஈடுபடுத்தக் கூடாது என சட்டங்களை விதித்தார்.
அரசு உத்தியோகங்களில் உள்ள பெண்களுக்கு மகப்பேறுக் காலத்தில் விடுமுறை வழங்குவதோடு மட்டுமல்லாது சம்பளமும் வழங்கப்பட வேண்டும் என சட்டம் விதித்தார்.
“The Problem Of Rubber” என்ற நூலை எழுதி பிற்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிறுவனமான “Reserve Bank Of India” உருவாக காரணமாக இருந்தார்.
முடிவுரை
இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக அரும்பணி ஆற்றிய பல போராட்டங்களை மேற்கொண்டு தீண்டாமையை ஓரளவுக்கு குறைத்த அம்பேத்கர் அவர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி டெல்லியில் உயிர் நீத்தார்.
பல சாதிக் கொடுமைகளை அனுபவித்து தனக்கு அடுத்துவரும் சமூகமானது தீண்டாமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு செயற்பட்ட இவரை என்றும் மறவாது செயலாற்றுதல் வேண்டும்.
You May Also Like: