இந்தியாவின் தேசிய விலங்கு வங்காளப்புலி ஆகும். இதனை ராயல் பெங்கால் புலி எனவும் அழைக்கின்றனர். புலி இந்தியாவின் தேசிய விலங்காக 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
சோழ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் புலியை தங்களது அரச சின்னமாக கடைப்பிடித்தனர். பல்வேறு சிறப்புகளை கொண்ட புலி பற்றி சில வரிகளை பார்ப்போம்.
புலி பற்றி சில வரிகள்
புலி இந்தியாவின் தேசிய விலங்கு ஆகும்.
புலியின் வலிமை, விரைந்தோடும் இயல்பு, பேராற்றல் ஆகியவையே இந்திய தேசிய விலங்கு என்னும் பெருமையை இதற்குப் பெற்றுத் தந்தன.
புலி பூனைக் குடும்பத்தை சேர்ந்தது. இது பெரும்பூனை என்ற பேரினத்தை சேர்ந்தது. இது ஒரு பாலூட்டி ஆகும்.
இதன் உடலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மயிர்களையும் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும்.
பொதுவாக வேட்டையாடிய இரையை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றே உண்ணுகின்றன.
புலிகள் மாமிசம் மட்டுமே உண்ணும். இவை பொதுவாக மான், காட்டெருமை, மாடு, ஆடு, காட்டுப்பன்றி ஆகியவற்றை விரும்பி உண்ணும்.
புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயது வரை வாழ்கின்றன.
புலிகள் பெரும்பாலும் மறைவிடம், அதிகம் இரை உள்ள இடம், நீர் நிலைகளின் அருகில் காணப்படும்.
புலிகள் நன்கு நீந்துபவையாக காணப்படுகின்றன. வேட்டையாடவும், ஆறுகளை கடக்கவும், பெரும்பாலும் குளங்கள் மற்றும் நீரோடைகளில் குளிர்ச்சிக்காக நீந்தி செல்கின்றது.
புலிகளால் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம் வரை ஓட முடியும். புலியின் பின்னங்கால்கள் அதன் முன்னங்கால்களை விட நீளமாக உள்ளன.
புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும். புலிகளின் உறுமல் சத்தம் 3 கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும்.
புலிகளில் வங்கப் புலி, சுமத்திரப் புலி, மலேசியப் புலி, தென்சீனப் புலி, இந்தோசீனப் புலி, மால்டீஸ் புலி, பலகைக் கல்நிறப் புலி,என பல வகைகள் உள்ளன.
புலிகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29ம் திகதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. தேசிய விலங்கான புலியை பாதுகாப்பது எமது கடமையாகும்.
You May Also Like: