எமது சமூகத்தில் ஆண், பெண் ஆகிய இருப்பாலாருக்கும் சமத்துவமான உரிமைகளும், சுதந்திரமும் வழங்கப்படுவதே பாலின சமத்துவம் எனப்படுகின்றது.
இவ்வாறாக இந்த பாலின சமத்துவம் என்பது பேணப்படும் போதிலே தான் சமூகம் சீராக இயங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தற்காலங்களில் இந்த பாலின சமத்துவத்தை கோரியே பல்வேறு போராட்டங்கள் நிகழ்வுதனைக் காணமுடிகின்றன.
பாலின சமத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பாலின சமத்துவம் என்றால் என்ன
- பாலின சமத்துவத்தின் அவசியம்
- பாலின சமத்துவமின்மையினால் ஏற்படும் பாதிப்புக்கள்
- பாலின சமத்துவத்தினால் யார் பயன் அடைகின்றனர்
- முடிவுரை
முன்னுரை
நாட்டில் எந்தவித முரண்பாடுகளும் அற்ற செழிப்பான ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு அங்கு பாலின சமத்துவம் காணப்படுதல் முக்கியமான ஒன்றாகும்.
இந்த பாலினம் என்பது நடை, உடை, பாவனை, குணாம்சங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண், பெண் ஆகியோர்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் ஆகும்.
சமூகத்தில் வாழும் அனைத்து மானுடர்களும் சம உரிமைகளோடும், சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவே இந்த பாலின சமத்துவம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
பாலின சமத்துவம் என்றால் என்ன
பாலின சமத்துவம் என்பது நாட்டில் வாழக்கூடிய மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமையோடு இணைத்து சுபிட்சமான வாழ்வையும் அளிப்பதாகவே காணப்படுகின்றது.
இந்த பாலின சமத்துவம் பற்றி யூனிசெப் நிறுவனம் குறிப்பிடுகையில் “பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஆகியோர் சமமான உரிமைகள், வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு, அவர்கள் ஒன்று போல் நடத்தப்பட வேண்டும் இதுவே பாலின சமத்துவம்” என்கின்றனர்.
2022 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி பாலின சமத்துவம் நிலவும் 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 135 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாலின சமத்துவத்தின் அவசியம்
சமூகத்தில் வாழும் ஒவ்வொரு பாலினமும் தம்முடைய திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் தங்களது விருப்பு வெறுப்புகளை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நிறைவேற்றிக் கொள்வதற்கும் அடிப்படை காரணமாக அமைவது இந்த பாலின சமத்துவமே ஆகும்.
அதாவது ஆண், பெண் என்ற வேறுபாட்டினால் அவர்களுக்கான உரிமைகளும் சுதந்திரங்களும் மீறப்படக்கூடாது என்பதனையே இது எடுத்துக்காட்டுகின்றது.
முக்கியமாக இந்த பாலின சமத்துவமானது பெண்களுக்கு எதிராக நிகழும் அநீதிகளையும், குற்ற செயல்களையும் சமூகத்தில் குறைத்து பெண் உரிமைகளை பாதுகாப்பதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
பாலின சமத்துவமின்மையினால் ஏற்படும் பாதிப்புகள்
ஆண், பெண் என்ற வேறுபாட்டின் அடிப்படையில் கல்வி, பதவி, பொருளாதாரம், சமூக நிலை போன்றவற்றில் பாலின சமத்துவமின்மைகள் நிலவுகின்றன.
அதாவது ஆண், பெண் ஆகிய இருவரும் ஒரே வேலைத்தளத்தில் ஒரே பணியை புரிகின்ற போதும் ஆணுக்கு அதிக சம்பளமும் பெண்ணுக்கு குறைவான சம்பளமும் கிடைக்கப்பெறுகின்ற நிலையே காணப்படுகின்றது. இதனால் அங்கு பெண்களுக்கான அந்தஸ்து குறைக்கப்படுகின்றது.
இவ்வாறு நடைபெறுகின்ற வேளையில் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாகவே இந்த பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது.
மேலும் ஒவ்வொருவரும் தன்னுடைய தனித் தனி திறமைகளை வெளிப்படுத்தவும் தடையாக அமைவதாகவே இந்த பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது.
பாலின சமத்துவத்தினால் யார் பயன் அடைகின்றனர்
குறிப்பாக இந்த பாலின சமத்துவத்தினால் அதிகமாக பயனடைபவர்களாக பெண்களே காணப்படுகின்றனர்.
அதாவது தனக்கு விருப்பமான கல்வியை கற்றுக் கொள்ளவும், தனக்கு தேவையான வேலைகளை பெற்றுக் கொள்ளவும், தன்னுடைய வாழ்க்கையையில் முக்கியமான கட்டங்களை தீர்மானிக்கவும் இந்த பெண்களுக்கு பாலின சமத்துவம் என்பது உதவுவதாகவே காணப்படுகின்றது.
ஏனெனில் தற்கால சமூகங்களில் மரபு வழியாக பின்பற்றப்பட்டு வந்த மூடநம்பிக்கைகளின் தாக்கம் இருந்து கொண்டே வருகின்றது.
அதனால் பெண்கள் வெளியே செல்லக்கூடாது, வேலைகளுக்கு செல்லக்கூடாது, உயர்கல்விகளை கற்க கூடாது என்ற கண்ணோட்டம் சமூகத்தில் தொடர்வதனால் இந்த பாலின சமத்துவமானது பெண்கள் சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் செயல்படுவதற்கு உதவி புரிகின்றது.
முடிவுரை
தற்கால உலகில் அதிகமானோரது பேசு பொருளாக காணப்படுவது இந்த பாலின சமத்துவமாகும். அதாவது உலகில் எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இல்லை என்பதனை உணர்த்துவதாகவே இந்த பால்நிலை சமத்துவம் காணப்படுகின்றது.
சுதந்திரமாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையை சுதந்திரமாக தீர்மானிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் இந்த பால் நிலை சமத்துவப் தேவையானது என்பதை சமூகத்தினர் அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒரு விடயமாகும்.
You May Also Like: