நுகர்வோர் மன்றம் கட்டுரை

nugarvor mandram katturai in tamil

மனிதன் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இன்னொரு மனிதனுடன் தொடர்புடையவனாகவே இருக்கிறான். அந்த வகையில் வணிகம் செய்பவர்களும், அவர்களுக்கான நுகர்வோர்களும் உலகில் வாழ்கின்றனர்.

எனவே நுகர்வோர்களுக்கான பொருட்களும், சேவைகளும் தரமானதாகவும், சரியான விலை கொண்டதாகவும் இருத்தல் அவசியமானதாகும்.

நுகர்வோர் மன்றம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நுகர்வோர் என்றால் யார்
  • நுகர்வோருக்கான சட்ட ஏற்பாடுகள்
  • நுகர்வோருக்கான பாதுகாப்பு சட்டத்தின் அவசியம்
  • நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் கடமைகள்
  • முடிவுரை

முன்னுரை

நாம் அன்றாடம் உபயோகித்துக் கொண்டிருக்கும் பொருட்களை பல்வேறு வர்த்தக மையங்களில் இருந்தும் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் இருந்தும் பெற்றுக் கொள்கின்றோம்.

எனவே இவ்வாறு பொருட்களை விலை கொடுத்து வாங்கும் நுகர்வோர்கள் அப்பொருட்களின் தரத்தையும், பயன்பாடுகளையும் அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

நுகர்வோர் என்றால் யார்

உலகில் மக்கள் தங்களுடைய சுய தேவைகளையும், அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, பல்வேறு பொருட்களையும், சேவைகளையும் வாங்க கூடியவர்களாகவே உள்ளனர்.

இந்த வகையில் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வாங்குபவர்களை நுகர்வோர் என குறிப்பிடப்படுகின்றது. வர்த்தகத்தின் போதும் சந்தைப்படுத்தலின் போதும் இந்த நுகர்வோர் என்பவர்கள் பிரதானமானவர்களாக கருதப்படுகின்றனர்.

அதாவது நுகர்வோரை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே இந்த சந்தைப்படுத்தல் நிகழ்வுகள் இடம் பெறுவதனைக் காண முடியும்.

நுகர்வோருக்கான சட்ட ஏற்பாடுகள்

எமது நாட்டினை பொறுத்த வரைக்கும் வணிகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

எனவே இங்கு நுகர்வோர் அதிகமாகவே காணப்படுகின்றனர் அந்த வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது 1984 ஆம் ஆண்டளவில் முதன்முறையாக இயற்றப்பட்டதோடு 1986 ஆம் ஆண்டும் அமுழுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் நுகர்வோர் ஒவ்வொருவரும் தான் கொள்வனவு செய்கின்ற பொருட்களை தரமற்றவையாக காணப்படுகின்ற போது சட்ட ரீதியாக புகார் அளிக்கும் உரிமை வழங்கப்பட்டு இருந்தது. தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இது வாய்ப்பளித்தது.

இதன் தொடர்ச்சியாக 2019ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது புதிய ஏற்பாடுகளுக்கு உட்பட்டு இன்று வரை நடைமுறையில் இருந்து வருவதனைக் காண முடியும்.

நுகர்வோருக்கான பாதுகாப்புச் சட்டத்தின் அவசியம்

நுகர்வோருக்கான பாதுகாப்பு சட்டம் ஒன்று நாட்டில் அமுலில் இருக்கும் பொழுதே அந்நாட்டு மக்கள் நுகர்வோர் என்றால் யார், அவர்களுக்கான உரிமைகள் என்ன, அவர்களுக்கு எந்த எந்த விடயங்களுக்காக முறைப்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் போன்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்களை அறிந்து கொள்ள முடியும்.

எனவே தான் இச்சட்டத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே வீட்டு வரி, தொழில் வரி, நிலவரி போன்ற வரிகள்  முறையற்றவனாக இருந்தால் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, நியாயங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தியாவில் மட்டும் 587க்கும் மேற்பட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் இருப்பதனை காணலாம்.

நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் கடமைகள்

நுகர்வோர் ஒவ்வொருவரும் தான் கொள்வனவு செய்கின்ற பொருட்கள் தரமற்றதாக காணப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்கும் உரிமை உடையவர்களாக காணப்படுகின்றனர்.

மற்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டனை பெற்றுக் கொடுக்கும் உரிமையையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் பற்றுச் சீட்டினை பெற்றுக் கொள்வதோடு பொருட்களில் உரிய சான்றிதழ்களும், முத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளனவா என சரி பார்த்துக் கொள்வதோடு, வாங்கும் பொருட்களின் தரம், எடை, விலை என்பவற்றை கவனத்தில் கொள்வதும் நுகர்வோரது கடமையாகவே காணப்படுகின்றது.

இவ்வாறான உரிமைகளையும் கடமைகளையும் நுகர்வோர் அறிந்து கொள்வது அவசியமாகும்.

முடிவுரை

தற்காலங்களை பொறுத்த வகையில் சந்தைப்படுத்தல் என்பது நுகர்வோருக்கு பாதகமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அதாவது மக்களின் நலங்களை கவனத்தில் கொள்ளாது இலாபம் ஈட்டுதல் எனும் வகையிலேயே தற்போது வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய தரமற்ற பொருட்களை அதிகமாக சந்தைப்படுத்தபடுகின்றமையோடு, அவற்றின்  விலையேற்றமும் அதிகமாகவே காணப்படுகின்றன.

எனவே இவ்வாறான தரமற்ற போலியான பொருட்களை வழங்காது நுகர்வோருக்கு தரமான பொருட்களை வழங்குவதே அவசியமாகும். என்பதனை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

You May Also Like:

நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை