ஒரு மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாதவை ஆரோக்கியமான உணவு மற்றும் போதியளவு தூக்கம் என்பனவாகும்.
இன்றைய நவீன காலத்தில் மக்கள் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருப்பதனால் போதியளவு நித்திரை கொள்வதை குறைத்து விட்டனர். எனவே இன்றைய பதிவில் நாம் தூக்கம் வருவதற்கான எளிய வழிகள் சிலவற்றை பார்ப்போம்.
தூக்கம் வர எளிய வழிகள்
1. இரவு உணவு
தினமும் இரவு தூக்கத்திற்கு செல்வதற்கு 2 மணித்தியாலங்கள் முன்பு இரவு உணவை உட்கொள்ளுதல் சிறந்தது.
2. உடற்பயிற்சி
இரவு உணவை உண்ட பின்னர் சிறிது நேரம் நடைபயிற்சி செய்தல் நன்றாக தூக்கத்தை வரவைக்கும்
3. நீர் அருந்துதல்
இரவு நேரங்களில் அதிகமான நீர் அருந்துவதை தவிர்ப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் வருவதை தவிர்க்கலாம். இதனால் தூக்கத்தின் இடையில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்படாது.
4. சுடுநீரில் குளித்தல்
இரவில் குளிக்கும் பழக்கம் இருப்பவர்கள் சுடுநீரில் குளித்தல் இதமான தூக்கத்தை தரும்.
5. சரியான நேரத்தில் தூங்குதல்
தினமும் ஒரே நேரத்தில் தூக்கத்திற்கு செல்லுதல் நன்று. குறிப்பாக 10 மணிக்கு முன்பாக தூக்கத்திற்கு செல்லுதல் சால சிறந்தது.
6. பால்
இரவு உணவுக்குப் பின்னர் இளஞ்சூடான பாலில் சிறிதளவு ஏலக்காய் பொடி கலந்து குடித்தால் இதமான நித்திரை வரும்.
7. மஞ்சள், மிளகு
பாலில், மிளகு, மஞ்சள் போன்றவற்றை சேர்த்து இரவு உணவுக்குப் பின்னர் குடித்து வர நல்ல தூக்கம் வரும்.
8. பாதாம்
இரவு உணவுக்குப் பின்னர் சிறிதளவு பாதாம் உட்கொண்டு விட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும். இரவில் பசியும் எடுக்காது.
9. பச்சைக் காய்கறிகள்
இரவு உணவு உட்கொள்ளும் போது கட்டாயமாக ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பச்சைக் காய்கறிகளை எடுத்தல் ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
10. பழங்கள்
இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம், செரி, கிவி போன்ற பழங்களை உட்கொள்வதால் சிறந்த தூக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
போதியளவு நேரம் தூங்குவதாலேயே ஆரோக்கியமாகவும் மறுநாளில் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியும். எனவே தூக்கம் வருவதற்காக மேலே குறிப்பிட்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றி நாமும் ஆரோக்கியமான மனிதர்களாக வாழ்வோம்.
You May Also Like: