தற்காப்பு கலையில் பெண்கள் கட்டுரை

tharkappu kalaiyil pengal katturai in tamil

உலகில் பெண்கள் தங்களுடைய சுய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தற்காப்பு கலையினை பற்றி அறிந்திருப்பது, கற்றிருப்பது என்பது முக்கியமானதாகவே காணப்படுகின்றது. இதன்படி ஒவ்வொரு பெண்ணும் இந்த தற்காப்பு கலையினை பற்றி கற்றுக் கொள்வது சிறந்த ஒரு அம்சமாகவே காணப்படுகின்றது.

தற்காப்பு கலையில் பெண்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தற்காப்பு கலை என்றால் என்ன
  • பெண்கள் தற்காப்பு கலையினை பயில்வதன் அவசியம்
  • இந்தியாவுக்கே உரித்தான தற்காப்பு கலை
  • தற்காப்பு கலையினால் பெண்கள் அடையும் நன்மைகள்
  • முடிவுரை

முன்னுரை

நவீன உலகில் பெண்ணியல் வாதம், பெண் அதிகாரம் மற்றும் ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்கள் என்றெல்லாம் பேசப்பட்டாலும் உடல்-உள ரீதியில் பெண்கள் மென்மையானவர்களாகவும், மிருதுவானவர்களாகவுமே காணப்படுவதனால்

தம்மைத் தாமே ஒரு பிரச்சினையின் போது காத்துக் கொள்வதற்கு இந்த தற்காப்பு கலையில் ஒன்றியேனும் அறிந்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தற்காப்புக் கலை என்றால் என்ன?

தற்காப்பு கலைகள் என்பன எமது சுய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்படும் சண்டை பயிற்சிகளையும், ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும், செயற்பாடுகளையும் கொண்டமைந்தவையாகும்.

அதாவது தமக்கு ஏற்படும் உடல் ரீதியான அச்சுறுத்தவர்களுக்கு எதிராக தம்மை பாதுகாக்கும் வகையில் எதிரிகளை தோற்படிப்பதாகும்.

இவ்வாறான தற்காப்பு கலைகள் பல இன்று தற்காப்பு விளையாட்டுகள் என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகின்றன.

இதில் கராத்தே, குத்துச்சண்டை, ஜூடோ, குங்ஃபூ, கிண்டோ போன்ற வகைகள் காணப்படுகின்றன. இவ்வாறான கலைகளை பயில்பவர்கள் தற்காப்பு கலைஞர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

பெண்கள் தற்காப்பு கலையினை பயில்வதன் அவசியம்

ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த தற்காப்பு கலைகளினை பயில்வது அவசியமாகவே காணப்படுகின்றது.

தன் கூடவே ஒரு பெண் வைத்துக் கொள்ளும் ஒரு ஆயுதமாகவே இந்த தற்காப்பு கலைகள் காணப்படுகின்றன. இவ்வாறாக பெண்கள் துணிச்சலோடும், தைரியத்தோடும் செயல்படுவதற்கு தற்காப்பு கலைகளை பயில்வது அவசியமாகும்.

இந்தியாவுக்கே உரித்தான தற்காப்புக் கலை

உலகின் மிகவும் பழமையான தற்காப்பு கலைகளில் ஒன்றாக காணப்படும் களரி என்ற தற்காப்புக் கலையே இந்தியாவுக்கு உரித்தான தற்காப்பு கலையாக காணப்படுகின்றது.

இந்த களரி என்பது போர்க்களத்தினை குறிப்பதாகும். எனவே இது போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ஒரு தற்காப்பு கலை என்று சொல்ல வேண்டும். இதன் தோற்றம் கேரள மாநிலமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தற்காப்புக் கலையினால் பெண்கள் அடையும் நன்மைகள்

பெண்கள் தங்களுக்கு எதிராக வரக்கூடிய சூழ்ச்சிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், சமூகத்தில் சுதந்திரமாக செயல்படவும் இந்த தற்காப்பு கலைகள் உதவி புரிகின்றன.

அத்தோடு தற்காப்புக் கலைகளில் முறையான பயிற்சிகளை பெறுவதன் மூலம் உடல்நலம், வலிமை, சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலமும் முழு உடலையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த தூண்டுவதும் ஒரு நன்மையாகும்.

மேலும் எதிரிகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளல், சுறுசுறுப்பான ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்தல் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குவதாக இந்த தற்காப்புக் கலைகள் காணப்படுகின்றன.

முடிவுரை

ஒரு பெண் சுதந்திரமாக செயல்படுவதற்கு பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.

எனவே தான் ஒரு பெண் சூழ்ச்சிகள் நிறைந்த இந்த உலகினில் தன்னுடைய இருப்பினை நிலைநாட்டிக் கொள்ளவும், ஆபத்துக்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும்

இந்த  தற்காப்புக் கலைகளினை பயில்வது அல்லது கற்றுக் கொள்வது என்பது முக்கியமான ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. என்பதில் எந்தவித ஐயமும் இல்லை எனக் கூற முடியும்.

You May Also Like:

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

பெண்மை பற்றிய கட்டுரை