தஞ்சை பெரிய கோவில் பற்றி சில வரிகள்

தஞ்சை பெரிய கோவில் பற்றி 10 வரிகள்

பல இன மக்களும் சேர்ந்து ஒற்றுமையாக வாழும் இவ்வுலகில் பலவகையான வணக்கஸ்தலங்களும் காணப்படுகின்றன. அந்த வகையில் தமிழர்களின் பெருமைகளை காட்டும் இந்தியாவில் உள்ள தஞ்சைப் பெரிய கோவிலானது மிகப் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த ஒரு கோயிலாக காணப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவில் பற்றி சில வரிகள்

1. தஞ்சைப் பெரிய கோவிலானது 10 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் எனும் மன்னனால் கட்டப்பட்ட மிகப் பழமை வாய்ந்த கோவிலாகும்.

2. தஞ்சை மாவட்டத்தில் மலைகளோ பாறைகளோ இல்லாத காரணத்தினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கற்களும் பாறைகளும் கொண்டு வரப்பட்டு இக்கோவில் கட்டப்பட்டது.

3. ராஜராஜ சோழன் மற்றும் தஞ்சைப் பகுதியில் உள்ள மக்களின் தெய்வ பக்தி மற்றும் கலைத்திறன் போன்றவையே இக்கோவில் உருவாக காரணமாகும்.

4. இக்கோவிலில் ஒரே கல்லாலான மிக உயரமான இரு அதிசய தூண்கள் காணப்படுகின்றன.

5. கோயில் வாயிலின் மேல் ஐந்து நிலைகள் கொண்ட கருங்கல் கோபுரம் உயர்ந்து நிற்கின்றது.

6. இந்த கோவில் கோபுரம்தான் தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் உயரமான கோபுரம் ஆகும்.

7. நுழைவு வாயிலான ராஜராஜன் திருவாயினில் மூன்று நிலை கொண்ட கருங்கல் கோபுரம் உள்ளது.

8. நுழைவு வாயிலின் இருபுறமும் மிகப்பெரிய துவாரபாலகர் சிற்பங்கள், துவாரபாலகரின் வலது கால் “கதை” என்னும் ஆயுதத்தில் மேல் உள்ளது. அதைச் சுற்றியுள்ள பெரிய பாம்பு ஒன்று யானையை விளங்குவது போல் காணப்படுகிறது.

9. இப்பிரசித்தி பெற்ற கோயிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள மிகப் பெரிய நந்தி சிலையானது ஒரே கல்லால் செதுக்கப்பட்டதாகும்.

10. கோவிலின் கோபுரத்தை “திரு விமானம்” என்றும் கூறுவர். அதன் உச்சியில் மிகப் பெரிய உருண்டை வடிவிலான “கல்” உள்ளது.

11. இப் பெரிய கோவிலானது நூற்றுக்கணக்கான சுரங்கப் பாதைகளைக் கொண்டதாக காணப்படுகிறது.

12. இக் கோவிலின் மேற்பகுதி சுவரில் 108 பரதநாட்டிய முத்திரைகள் சிலைகளாக செதுக்கப்பட்டு காணப்படுகின்றது.

13. சிவலிங்கம் மட்டும் அல்லாது அம்மன், நடராசர், சுப்ரமணியன், கணபதி மற்றும் கருவூர் தேவ கோவில்களும் இவ்வளாகத்தில் உள்ளே காணப்படுகின்றது.

14. கோவிலில் உள்ள அழகு மிகுந்த ஓவியங்கள் அனைத்தும் இலைகள், பூக்களை கொண்டு செய்த இயற்கை வர்ணங்களால் தீட்டப்பட்டவையாகும்.

15. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) 1987 ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

16. தஞ்சைப் பெரிய கோவிலானது ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நிமிர்ந்து நிற்பது தமிழர்களின் கட்டிடக்கலைத் திறனை வெளிப்படுத்துகிறது.

You May Also Like:

தஞ்சை பெரிய கோவில் கட்டுரை