குடியரசு இந்தியாவின் சாதனைகள் கட்டுரை

kudiyarasu indiavin sadhanaigal

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மக்கள் வாழும் ஓர் நாடாகவே இந்தியா காணப்படுகின்றது. அதாவது இந்தியாவில் குடிமகனாக பிறந்த ஒவ்வொருவரும் பெருமிதம் அடையும் அளவுக்கு சிறப்பு மிகுந்த நாடாகவே நம்முடைய நாடு காணப்படுகின்றது.

குடியரசு இந்தியாவின் சாதனைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இந்தியாவின் இயற்கை சிறப்புக்கள்
  • இந்தியாவின் அறிவியல், கல்வி சாதனைகள்
  • தொழில்நுட்ப சாதனைகள்
  • இந்தியாவின் பொருளாதார நிலை
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் எம்முடைய இந்திய தேசமானது கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், விஞ்ஞானம், வானவியல், போன்ற அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து சாதனைகளை எட்டிய நாடாகவே காணப்படுகின்றது.

இவ்வாறாக பல்வேறு இன, மத, மொழி, சாதி வேற்றுமைகளை கொண்ட மக்களினைக் கொண்டுள்ள போதிலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஓர் நாடாகவே இந்திய தேசம் விளங்குவது அதன் சாதனைகளில் முதன்மையானதாகும்.

இந்தியாவின் இயற்கை சிறப்புகள்

எம்முடைய பாரத தேசமானது பரப்பளவில் உலகில் ஏழாவது பெரிய நாடாகவும் ஆசியாவில் இரண்டாவது பெரிய நாடாகவும் சாதனை கண்டுள்ளது.

மேலும் இந்தியாவின் எல்லைகளை பார்ப்போமே ஆனால் வடக்கில் இமாலய முகடுகளையும், தெற்கில் அழகான கடற்கரைகளையும், மேற்கில் பாலைவனத்தினையும், கிழக்கில் இயற்கைப் பாரம்பரியங்களையும் கொண்ட ஒரு சிறந்த புவியல் தோற்றத்தினை கொண்டுள்ளமையை காணலாம்.

இந்தியாவின் அறிவியல், கல்வி சாதனைகள்

இன்று நாம் வாழும் உலகில் அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுள்ளது எனலாம். கல்வியின் மூலமாக அறிவியல் உச்சத்தை எட்டிய பல்வேறு சாதனையாளர்களை கொண்டுள்ளது.

இந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் கடமையாற்றும் சுந்தர் பிச்சை, தன்னுடைய கவிகளின் மூலம் சமூக சீர்திருத்தத்துக்காக உதவிய பாரதியார், தலைசிறந்த விஞ்ஞானியாக விளங்கிய அப்துல் கலாம் போன்ற சாதனையாளர்களின் மூலம் இந்தியா தேசமானது அறிவியல் மற்றும் கல்வியில் சாதனை கண்டுள்ளமையை காணலாம்.

தொழில்நுட்ப சாதனைகள்

இந்திய நாடானது தொழில்நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்து வருவதனை காண முடியும் இந்த வகையில் இந்தியாவில் பல்வேறு அணு ஆராய்ச்சி மையங்கள் காணப்படுவதோடு இந்திய நாடு அணு ஆற்றல் வளர்ச்சிக்கு முதன்மை அளிப்பதையும் காணலாம்.

மேலும் விண்வெளி ஆய்வுகளிலும் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் ஆரம்ப காலங்களில் விண்வெளி ஆய்வுகளை ஈடுபட்ட அப்துல் கலாம் தொடக்கம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணாகிய கல்பனா சாவ்லா வரை சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்று தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானிலை, இயற்கை வளங்களை கண்டறிதல் போன்றவற்றினை திறனாக வளர்ப்பதற்கு செயற்கைக்கோள்களை உருவாக்கி அவற்றை விண்ணில் செலுத்தியது வரை இந்தியாவின் தொழில்நுட்பம் சாதனை படைத்துள்ளமையை காண முடியும்.

இந்தியாவின் பொருளாதார நிலை

இன்று கைத்தொழில் துறைகளும், விவசாயம், போக்குவரத்து போன்ற துறைகளும், தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாகவே அமைகின்றது.

தற்காலத்தில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி உச்சத்தினை தொட்டுள்மையினால் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது எனலாம். எனவே இந்தியா பொருளாதாரத்தில் இன்னும் உச்சத்தை தொட வேண்டுமானால் ஏனைய அனைத்து துறைகளும் சாதனை படைக்க வேண்டும் என குறிப்பிடலாம்.

முடிவுரை

நம்முடைய இந்திய நாடானது பொருளாதாரம், கைத்தொழில், தொழில்நுட்பம், கல்வி போன்ற அனைத்து துறைகளிலும் சாதனைகள் கண்டுள்ள போதிலும் நாட்டில் நிகழும் லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவற்றினை இல்லாமல் அழிப்பதன் மூலமே எமது நாடு மேலும் சாதனை படைக்கும் என குறிப்பிடலாம்.

எனவே குடியரசு இந்தியாவின் சாதனைகளை மென்மேலும் வளர்ப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

You May Also Like:

குடியரசு தினம் என்றால் என்ன

வருங்கால இந்தியா கட்டுரை