காடுகளின் முக்கியத்துவம் கட்டுரை

kadukalin mukkiyathuvam

காடுகளை பூமியின் நுரையீரல் என்று மக்கள் சிறப்பித்து அழைப்பர். காடுகளே நாம் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை கொடுக்கின்றது. இக்கட்டுரையில் காடுகளின் பயன்கள் பற்றி நோக்கலாம்.

காடுகளின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • காடுகளின் வகைப்பாடு
  • காடுகளின் பயன்கள்
  • காடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்
  • காடுகளை பாதுகாத்தல் வேண்டும்
  • முடிவுரை

முன்னுரை

மனிதன் வாழும் சூழலானது நிலம், நீர், காற்று, விலங்குகள், தாவரங்கள் ஆகிய உயிரற்ற, உயிருள்ள கூறுகளை உள்ளடக்கியது. அந்த வகையில் காடுகள் என்பது மரங்களின் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படும்.

மனிதர்களுக்கு காடுகளானது அனைத்து விதத்திலும் மிகவும் பயனுள்ளதாக தான் உள்ளது. காட்டில் இருக்கின்ற மரத்திலிருந்து காகிதம், வீடு கட்டுவதற்கு பெரும்பாலும் மரங்கள் பயன்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல் காடுகளிலிருந்து நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.

காடுகளில் வகைப்பாடு

காடுகளை பல்வேறு வழிகளில் வகைப்பாடு செய்துள்ளனர். அவற்றுள் ஒன்று காடுகள் அமைந்துள்ள உயிர்சூழலை அடிப்படையாகக் கொண்டது.

இந்த வகையில் அக்காடுகளில் உள்ள முதன்மையான தாவர வகைகளின் இலைகளின் இருப்பு நிலையும் (பசுமையிலைத் தாவரம், இலையுதிர் தாவரம்) எனவும் இன்னொரு முறையிலான வகைப்படாக முதன்மை இனங்கள் அகன்ற இலைத் தாவரங்கள், ஊசியிலைத் தாவரங்கள் என்பதை அடிப்படையாக கொண்டது.

உலகில் உள்ள காடுகளை 26 முதன்மை வகைகளாக வகைப்படுத்துகிறது. இது காலநிலை வலயங்களையும் மரங்களின் வகைகளையும் கருத்தில் கொள்கிறது. இந்த 26 வகைகளையும் ஆறு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

காடுகளின் பயன்கள்

காடுகளை பூமியின் நுரையீரல் என்று மக்கள் சிறப்பித்து அழைப்பர். காடுகளே நாம் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை கொடுக்கின்றது.

நாம் அருந்துவதற்கு சுத்தமான நீர், உண்பதற்கு காய்கறிகள், கிழங்கு வகைகள், மருந்து தயாரிக்க மூலிகைகள், செடிகளாக, வாழ்வதற்கு வீட்டினை உருவாக்கம் செய்து தருவதற்கு என பல்வேறு வகையிலும் காடுகள் நமக்கு பயன்தரக்கூடியதாக இருக்கின்றது.

காடுகளை நம்பியே இரண்டு பில்லியன் மக்கள் அவர்களது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பூமிக்கு தேவையான இருபது வீதமான ஆக்சிஜனை அமேசன் காடுகள் உற்பத்தி செய்கின்றன.

காடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்

இன்றைய சனத்தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப அவர்களின் தேவைகளும் அதிகரிக்கின்றன. இதனால் காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்களாக மாற்றப்படுகின்றன.

அது மட்டுமன்றி அதற்குரிய போக்குவரத்து பாதை அமைப்பதற்காக காடுகளை அழிக்கின்றனர். காட்டு நிலங்களை வேளாண்மை, நகராக்கம், மேய்ச்சல் நிலங்களுக்காக காடழிப்பை மேற்கொள்கின்றனர்.

மறுபுறம் வணிகபதிவு நடவடிக்கைகளுக்காக உலக சந்தையில் காகிதம் மற்றும் மரகூழ் தயாரிப்புக்களை வழங்குகின்றன. இதனாலே காடுகள் பல சவால்களை எதிர்கொள்கின்றது.

காடுகளை பாதுகாத்தல் வேண்டும்

காடுகள் தான் நீர் வளங்களை பாதுகாத்து கொள்கிறது. மலைகளிலுள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும் போது மரங்களின் இலைகளால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுவதால் அங்குள்ள வளமான மண் கரையாமல் பாதுகாக்கப்படுகிறது.

காடுகளில் பனி பெய்யும் போது பனியானது மெதுவாகத்தான் உருகும். காடுகளின் பயன்களை உணர்ந்து காடுகளை அழித்தல் கூடாது.

முக்கியமான கட்டுமான பொருட்களை தயாரிக்க மரங்கள் தேவைப்படும் பட்சத்தில் மரங்களை வெட்டி எடுத்த பின் வெட்டிய மரத்திற்கு பதிலாக இன்னொரு மரங்களை நடுதல் வேண்டும்.

அநாவசியமாக மரங்களை வெட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மக்கள் மத்தியில் மரங்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல். போன்ற இவ்வாறான செயற்பாடுகள் மூலம் காடுகளை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

காடுகளை அழிப்பதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் காட்டின் வளத்தை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். நாட்டினுடைய நலனிற்காக மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும்.

இப்போதெல்லாம் மாணவர்களிடையே காடுகளைப் பற்றியும் அதன் பலன்களைப் பற்றியும் விழிப்புணர்வு பாடத்திட்டங்கள் சேர்க்கப்படுகின்றன.

காடுகளை பாதுகாக்கும் விதமாக உலக காடுகள் தினம் மார்ச்-21 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த தலைமுறையினர் பாதுகாப்பாக வாழ காடுகளை பாதுகாப்போம்.!

You May Also Like:

பருவ காலங்கள் கட்டுரை

அறிவியல் அழிவு கட்டுரை