கரிநாள் என்றால் என்ன

karinal endral enna

நல்ல காரியங்கள் நடத்த வேண்டும் என்றால் அந்த நாள் நல்ல நாளா என்பதை சரிபார்த்துவிட்டு தான் சுபநிகழ்ச்சியை வைக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வோம். இந்த பழக்கம் பொதுவாக பல பேருக்கு உண்டு.

ஆனால் அந்நாள் கரிநாளாக இருந்தால் அந்த நாட்களில் எந்த ஒரு நல்ல காரியமும் நடத்தக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

கரிநாள் என்றால் என்ன

சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் எப்படி கணக்கிடப்படுகிறதோ அதேபோல சூரியனை வைத்து கரிநாள் கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று நாட்களும், ஒவ்வொரு வருடத்திற்க்கும் 34 தொடக்கம் 35 நாட்களும் வரும் இக்கரிநாட்கள் சூரியனின் கதிர்வீச்சு மிகவும் அதிகமாக காணப்படும் நாளாகும். இது சாஸ்திர முறைப்படி கணக்கிடப்படுகிறது.

கரிநாட்களில் செய்யக்கூடாதவை

திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், பெயர் சூட்டல், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா உட்பட எந்த நல்ல காரியமும் கரிநாளில் செய்வதில்லை.

கரிநாட்களில் செய்யக்கூடியவை

தெய்வம் சம்பந்தப்பட்ட யாகங்கள், ஹோமங்கள், பூஜைகள் இவைகளை எல்லாம் இந்த தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கரிநாட்களுடன் சூரியன் மற்றும் பஞ்சாங்கங்களின் தொடர்பு

கரிநாள் என்பது அஷ்டமி, நவமி போன்றோ அல்லது பரணி, கிருத்திகை போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே அர்த்தம்.

கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். அன்றைய தேதியில் சூரியனின் கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.

அதாவது கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் பொழுது நமது உடலில் உள்ள அனைத்து சுரபிகளும் சராசரிக்கு சற்று கூடுதலான அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சி வசப்படுவது, பதட்டம் ஆகுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்புகள் உண்டாகும்.

கரி நாளை கடைப்பிடிப்பது என்பது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும்தான் வழக்கத்தில் உள்ளது நடைமுறையில் இந்தியாவில் மற்றுப்பகுதிகளில் சந்திரமான மாதங்கள் நடைமுறையில் உள்ளன.

ஆனால் கேரளாவில் மற்றும் தமிழ்நாட்டில் தான் சௌரமான முறையில் கடைப்படப்படுகிறது. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள் அதாவது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்.

தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகின்றன. சித்திரையில் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரித்து தொடங்கி பங்குனியில் மீன ராசியில் தனது சுற்றினை முடிக்கிறார். 12 ராசிகளில் சூரியன் கடந்து செல்வதை வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது.

இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள் தான். கரிநாள் என்பது நல்ல நிகழ்வுகளை செய்ய ஏற்ற நாள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கை.

கரி நாட்கள் அமையப்பெற்றிருக்கும் விதம்

குறிப்பிடப்பட்டுள்ள கரிநாட்கள் அனைத்தும் தமிழ் நாட்களில் மாறுபடாது. எல்லா வருடத்திற்கும் ஒரே தேதியில் தான் கரி.நாட்கள் வரும் இந்த தேதிகளில் மாற்றம் இருக்காது.

  • தை மாதம் – 1,2,3,11,17
  • மாசி மாதம் – 15,16,17
  • பங்குனி – 6,15,19
  • சித்திரை – 6,15
  • வைகாசி – 7,16,7
  • ஆனி – 1,6
  • ஆடி – 2,10,20
  • ஆவணி – 2,9,28
  • புரட்டாசி – 16, 29
  • ஐப்பசி – 6,20
  • கார்த்திகை – 1,10,17
  • மார்கழி – 6,9,11

You May Also Like:

அஷ்டமி அன்று செய்ய கூடாதவை