ஐம்பொன் என்றால் என்ன

ஐம்பொன் என்றால் என்ன

எமது அன்றாட வாழ்வில் பல்வேறு வகையான ஆபரணங்களை அணிகின்றோம், பயன்படுத்துகின்றோம். அந்த வகையில் விலை உயர்ந்த ஆபரணங்களில் ஐம்பொன் அணிகலன்களும் ஒன்றாக காணப்படுகிறது.

பொன் என்றால் என்ன

பொன் என்பதற்கு ‘உலோகம்’ என்று தான் பொருள். ஆனால் தற்போது வழக்கத்தில் பொன் என்றால் தங்கத்தை மட்டுமே குறிப்பதற்கு பயன்படுத்துகிறோம்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திருவள்ளுவரின் பின்வருகின்ற திருக்குறளை கூறலாம். இந்த குறளில் இரும்பு என்பதனை குறிப்பிட “பொன்” என்ற சொல்லினை பயன்படுத்துகிறார் வள்ளுவர். அதற்கு இந்த குறள் சிறந்த உதாரணமாக அமைந்து காணப்படுகின்றது.

“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று”

ஐம்பொன் என்றால் என்ன

ஜம்பொன் என்பதனை ஐம்+பொன் எனப்பிரித்து நோக்கலாம். இதில் “ஐம்” என்பது ஐந்து அல்லது ஐவகை என்றும், “பொன்” என்பது உலோகம் என்பதையும் குறிக்கிறது.

அதாவது, ஐம்பொன் என்பது செம்பு (Copper), வெள்ளி (Silver), தங்கம் (Gold), துத்தம் (Zinc), மற்றும் ஈயம் (lead) ஆகிய ஐந்தையும் உள்ளடக்கிய விலை உயர்ந்த உலோகமாகும். இது “பஞ்சலோகம்” எனவும் அழைக்கப்படுகிறது.

ஐம்பொன் குறிக்கும் கிரகங்கள்

  1. செம்பு – சூரியன்
  2. வெள்ளி – சுக்கிரன்
  3. தங்கம் – வியாழன்
  4. துத்தம் – சனி
  5. ஈயம் – கேது

நவக்கிரகங்களின் கதிர்வீச்சு மனிதர்களின் சுபாவத்திலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் பலாபலன்களை பெறுவதற்காக மனிதர்கள் அணிகலன்களாக ஐம்பொன் ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர்.

ஐம்பொன் சிலைகள்

ஐம்பொன் சிலைகள் பாரம்பரியமாக தங்கம், வெள்ளி, செப்பு, துத்தம் மற்றும் ஈயம் ஆகியவற்றின் முக்கிய கலவையாக உருவாக்கப்படும் சிலைகள் ஆகும்.

மேலும் சில சந்தர்ப்பங்களில் துத்தகத்திற்கு பதிலாக அதிகளவில்  செம்பு அல்லது ஈயம் என்பவற்றை பயன்படுத்தப்படுகின்றது.

ஐம்பொனின் கலவையால் உருவான சிலைகளை பூஜிப்பது வாழ்க்கையில் சமநிலையையும், தன்னம்பிக்கையும், நல்ல ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் பரவலாக அனைவருக்கும் வழங்குகிறது

ஐம்பொன் பயன்கள்

உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு துணை புரிகின்றன.

ஒருவரின் உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், மோதிரம் அல்லது காப்பு ஐம்பொன் உலோகங்கள் மூலம் உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளை ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் பெரிதும் துணை புரிகின்றது.

ஒருவரின் உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை ஐம்பொன்களுக்கு உண்டு.

ஒரு வழிபாட்டின் மந்திர அதிர்வுகளை உடலில் வாங்கும்போது சிந்தனை மேலோங்கும், மனம் சாந்தமடையும், உடல் சுறுசுறுப்பு அடைகிறது. இவற்றிற்கு அடிப்படையாக ஐம்பொன் காணப்படுகிறது.

பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி உடலில் உலோக சக்தியை அதிகரிக்க செய்யும்.

ஐம்பொன்னிலான காப்பினையோ, மோதிரத்தினையோ அல்லது வேறேதும் அணிகலன்களை நாம் அணியும்போது, எமது உடலின் வெப்பநிலை சமப்படுத்தப்படுகிறது.

ஐம்பொன்னினால் செய்யப்பட்ட மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதனால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டாக்குகின்றன அது முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி ஒருவருடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும்.

அதாவது ராஜ உறுப்புகள் என அழைக்கப்படுபவை  இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் என்பவையே ஆகும்.

You May Also Like:

தன்னடக்கம் என்றால் என்ன